Category சுவிற்சர்லாந்து

பறக்கவிடப்படும்போது கிழிந்த மிகப்பெரிய சுவிஸ் கொடி

இன்று வியாழக்கிழமை சாண்டிஸின் அடிவாரத்தில் உள்ள புல்வெளி சரிவில் ஒரு பெரிய சுவிஸ் கொடி விரிக்கப்பட்ட பின்னர் கிழிந்தது. மோசமான வானிலை காரணமாக, வழக்கம் போல் மலையின் வடக்கு முகத்தில் கொடியை தொங்கவிட முடியவில்லை. ஸ்வாகல்ப் அருகே உள்ள ஆல்பைன் புல்வெளியில் கொடியை விரிக்க ஏராளமான உதவியாளர்கள் உதவினர். வானிலை முன்னறிவிப்பு காரணமாக, சாண்டிஸ் பஹ்னனில்…

சிவப்பு விளக்கை மீறி தொடருந்தில் மோதிய மகிழுந்து ஓட்டுநர்

டியூஃபென்டல் ஏஜி தொடருந்து நிலையத்தில் மகிழுந்து ஒன்றில் பயணித்த ஓட்டுநர் ஒருவர் தொடருந்துக் கடவையைக் கடக்க முற்பட்ட போது மகிழுந்து தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது என ஆர்காவ் கன்டோனல் காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று செவ்வாய்க்கிழமை மகிழுந்து ஓட்நர் பஹ்ன்ஹோஃப்பிளாட்ஸிலிருந்து வைனென்டல்ஸ்ட்ராஸ்ஸேவுக்குத் திரும்ப விரும்பினார். ஆனால் சிவப்பு விளக்கு ஒளிர்ந்திருந்த போதும் அதைப் பொருட்படுத்தாது தொடருந்துக் கடவையை…

சுவிஸ் கிராமத்தில் நிலச்சரிவு

கிட்டத்தட்ட 300 பேர் வசிக்கும் பிளாட்டன் அருகே ஒரு பாறை சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக புவியியலாளர்கள் கணித்திருந்தனர். மே 19 அன்று ஒரு பனிப்பாறை சரிந்து, நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பு, குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். புதன்கிழமை சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு மலை கிராமத்தின் ஒரு பகுதியை பாறை மற்றும் பனிக்கட்டிகள் சரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வாலைஸ் மாகாணத்தில்…

சுவிட்சர்லாந்து ஜெர்மாட் அருகே ஐந்து பனிச்சறுக்கு வீரர்கள் இறந்து கிடந்தனர்

சுவிட்சர்லாந்தின் ரிம்ஃபிஷ்ஹார்ன் மலை அருகே ஞாயிற்றுக்கிழமை ஐந்து பனிச்சறுக்கு வீரர்கள் இறந்து கிடந்ததாக கேன்டன் வாலைஸில் உள்ள வழக்கறிஞர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஐந்து பேரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், மேலும் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஆய்வின் ஒரு பகுதியாக, இப்பகுதியில் வானிலை மற்றும் பனிச்சரிவு செயல்பாடுகள் ஆராயப்படுகின்றன. சுமார்…

சுவில் கோட்ஹார்ட் வடக்கில் 14 கிலோமீட்டர் நீளத்திற்கு போக்குவரத்து நொிசல்

காலையில், கோட்ஹார்ட் வடக்கு நுழைவாயிலுக்கு முன்னால் 14 கிலோமீட்டர் நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நண்பகலுக்குள், போக்குவரத்து நெரிசலின் நீளம் 11 கிலோமீட்டராகக் குறைந்தது. TCS X இல் தெரிவித்தபடி, இழந்த நேரம் இன்னும் 1 மணி நேரம் 50 நிமிடங்கள் ஆகும். Erstfeld UR மற்றும் Göschenen UR இடையேயான போக்குவரத்து நெரிசலுக்குக் காரணம்…

சுயமாக ஓட்டும் கார்களை அனுமதிக்கும் முதல் சுவிஸ் நகராட்சி

சூரிச்சின் ஃபர்ட்டல் பள்ளத்தாக்கில் உள்ள ஓட்டல்ஃபிங்கன் நகராட்சி சுசிட்சர்லாந்தில் சுயமாக ஓட்டும் கார்களுக்கு அதிகாரப்பூர்வமாக சாலைகளைத் திறந்த முதல் நகராட்சியாகும். இந்த இலையுதிர்காலத்தில் நிசானின் ஆரியா வகையைச் சோ்ந்த நான்கு சுய ஓட்டுநர் மின்சார காருடன் பயணிகளை இருத்தி சோதனை ஓட்டத்தைத் சாலையில் தொடங்கவுள்ளது.  தொடர்புடைய அனுமதிகள் ஃபெடரல் சாலைகள் அலுவலகம் (அஸ்ட்ரா), சூரிச் மாகாணம்…

சீன மின் மகிழுந்து உற்பத்தியாளர் BYD சுவிட்சர்லாந்திற்குள் அறிமுகமாகியது

சீன மின்சார மகிழுந்து உற்பத்தியாளரான BYD, சுவிஸ் சந்தையில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய மின்சார மகிழுந்து உற்பத்தியாளரான BYD, இந்த ஆண்டு இறுதிக்குள் சுவிட்சர்லாந்தில் 15 விற்பனை மையங்களைக் கொண்ட முகவர் வலையமைப்பை  கொண்டிருக்க திட்டமிட்டுள்ளது. சீன நிறுவனமான பிவைடி (BYD) இன்று செவ்வாய்க்கிழமை ஸ்ப்ரைட்டன்பாக்கில் உள்ள உம்வெல்ட் அரங்கில் சுவிஸ் சந்தைக்கு அதிகாரப்பூர்வமாக…

ஃபிஃபா ஊழல் வழக்கில் பிளாட்டர் மற்றும் பிளாட்டினி விடுதலை

ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து ஃபிஃபாவின் (FIFA ) முன்னாள் தலைவர் செப் பிளாட்டர் மற்றும் யுஇஎஃப்ஏவின் முன்னாள் தலைவர் மைக்கேல் பிளாட்டினி ஆகிய இருவரும் சுவிஸ் நீதிமன்றத்தால் நேற்று செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனர். 2011 ஆம் ஆண்டில் FIFA பணத்தில் 2 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை (இப்போது €2.1 மில்லியன்; $2.26 மில்லியன்) மோசடி, தவறான நிர்வாகம்…

சுவிஸ் பேர்ணில் துப்பாக்கிச் சூடு: ஓட்டுநர் படுகாயம்!

பேர்ணில் நேற்றுப் புதன்கிழமை இரவு 8.20 மணியளவில் லாங்காஸ் மாவட்டத்தில் மற்றொரு வாகனத்தில் இருந்து மகிழுந்து நோக்கி நோக்கி பல முறை சுட்டதில் ஓட்டுநர் ஒருவர் படுகாயமடைந்தார். காயமடைந்தவருக்கு நோயாளர் காவுவண்டி வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் சிகிற்சை வழங்கப்பட்ட பின்னர் உனடடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். தாக்குதல் நடத்தியவர் வாகனத்துடன் தப்பிச் சென்றுள்ளார். தற்போது காவல்துறையினர்…