Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
சூரிய ஒளியை கைகளால் மறைக்க முடியாது என்பதை இனியாவது சிங்கள பேரினவாதிகள் உணர்ந்து கொள்ள வேண்டுமென மூத்த ஊடகவியலாளர் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.. .மகாவம்சத்தை இலங்கையின் வரலாற்றை கூறும் நூல் என்று யுனெஸ்கோவுக்கு அனுப்பி யுனெஸ்கோ பதிவேட்டில் இடம்பெறச்செய்த சிங்கள பேரினவாதிகள் விஜயன் இலங்கையிலிருந்த ஐந்து சிவாலயங்களை புனரமைத்தான் என்பதையோ இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்களே என்பதையோ…
வைத்தியர் ஷாஃபியின் மகள் மருத்துவராவார்! இனவாதிகளால் இலக்கு வைக்கப்பட்டு , அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக சிறையில் அடைக்கப்பட்டு மிகப்பெரும் அநீதிக்குள்ளாக்கப்பட்ட வைத்தியர் ஷாஃபியின் மகள் குருநாகலில் இருந்து கல்முனை, கண்டி என்ன ஒவ்வொரு இடமாக அலைக்கழிக்கப்பட்டு, சிங்கள மொழியில் கற்ற பிள்ளை சிறிது காலம் தமிழ் மொழியில் கற்று, பின்னர் ஆங்கில மொழியில் கற்று பரீட்சை எழுதி…
இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான குற்றத்திற்கான மூல காரணத்தை வெளிப்படுத்த பிள்ளையான் இப்போது காத்திருக்கிறார் என அரச அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். அதேவேளை சிறையில் உள்ள பிள்ளையானை சந்திக்க ராஜபக்சர்களின் தூதராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாடுபடுவதாகவும் ஆளும் கட்சியின் சபைத் தலைவராக பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டியுள்ளார் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால்…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற தென்னிலங்கை தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மிக விரைவில் கைது செய்யப்படுவார் என்றும், அவர் முக்கிய அரசியல் பிரமுகர் என்றும் அரசு கூறிவருகின்றது. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில்…
இலங்கை பொருளாதார ரீதியிலான முன்னேற்றத்தினை எட்டாது தொடர்ந்தும் அபாய எல்லையினுள் இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. இந்நிலையில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்றும் அவர் சில மாதங்களில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாகுவார் என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் இப்போது சரிந்து கொண்டிருக்கிறது.…
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து முன்னாள் அரசாங்க உறுப்பினர்கள் சிலர், தற்போது எதிர்க்கட்சியில் இருப்பவர்கள், ஏன் இவ்வளவு கவலைப்படுகிறார்கள் என்று அரசாங்கம் கேள்வி எழுப்பி வருவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஏப்ரல் 21 ஆம் திகதி வெளியிடப்படும் என்று கூறப்படும் ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களின்…
பிள்ளையானுக்கு எதிரான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசு அறிவித்துள்ளது. இலங்கை அரசின் அமைச்சரவை பேச்சாளர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் மாத்திரம் பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. தற்போது அவர் மீதான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பான சாட்சியங்கள் கிடைத்துவருகின்ற நிலையில் அவை குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. …
முன்னாள் ஜனாதிபதிகளை இலக்கு வைத்து விசாரணைகள் தற்போதைய அரசில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்கியது தொடர்பாக 7 மணி நேரம் வாக்குமூலம் அளித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இதனிடையே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குமூலமளிக்க இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். அதன்படி, ஏப்ரல்…
ஈஸ்டர் விசாரணையை சீர்குலைக்கும் சமீபத்திய முயற்சிகள் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது.புதிய இரண்டு நீதிமன்ற உத்தரவுகள் தற்போதைய பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் தற்போதைய குற்றவியல் புலனாய்வு பகுப்பாய்வு மற்றும் தடுப்பு பிரிவின் இயக்குநர் சானி அபேசேகர ஆகியோரை குறிவைத்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், இரண்டு உத்தரவுகளும் தற்போது அவசரமாக மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர்…
தூயவன் Saturday, April 19, 2025 கொழும்பு இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரையில் 1,591 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில் 1,406 முறைப்பாடுகளுக்குத் தீர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் 185 முறைப்பாடுகள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் காவல்துறையினரிடம் இதுவரையில் 170 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக…