Category கொழும்பு

சிராந்திக்கு வலை:சகோதரன் உள்ளே!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்ச கைது அச்சம் மத்தியில் சிராந்தி ராஜபக்சவின் சகோதரரும் சிறிலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவருமான நிசாந்த விக்ரமசிங்க  கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மோட்டார் போக்குவரத்துத் துறையின் முன்னாள் ஆணையாளர் ஜெனரல் நிஷாந்த வீரசிங்க மற்றும் இருவர் செவ்வாய்கிழமை(1)இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டனர். மோட்டார் போக்குவரத்துத் துறையில்…

மகிந்த உதவி கேட்கவில்லையாம்?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது மனைவி சிராந்தியை கைதிலிருந்து காப்பாற்ற மல்வத்து மகாநாயக்க தேரரிடம் விடுத்த கோரிக்கை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. எனினும் அத்தகைய கோரிக்கைகள் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல் பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மல்வத்து மகா விகாரையின் பிரதி பதிவாளர் மஹாவெல ரத்தனபால தேரர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

சிராந்தி மற்றும் மகன்மார் அடுத்து கைது ?

மகிந்த குடும்பத்தின் சிராந்தி மற்றும் மகன்மார் அடுத்து கைது செய்யப்பட்டு சிறை செல்லலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.இந்நிலையில்  தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தவறான பிரச்சாரம் மற்றும் நற்பெயரைப் களங்கப்படுத்துவதன் செய்வதன் மூலம் அதன் தோல்விகளை மறைக்க முயற்சிப்பதாகவும், அதே நேரத்தில் மரியாதைக்குரிய சமயத் தலைவர்களை அரசியல் சர்ச்சைகளில் இழுப்பதாகவும்  நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி…

இரத்தான வர்த்தமானி எங்கே?

வடகிழக்கில் தமிழ் மக்களது காணிகளை சுவீகரிக்கும் இலங்கை அரசின் சதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கவென கடந்த மார்ச் 28ம் திகதிய  வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தாக்கல் செய்த மனு இன்று வெள்ளிக்கிழமை (27) விசாரிக்கப்பட்ட பின்னர்…

அருச்சுனா கதிரை பறிபோகிறது?

யாழ்.மாவட்ட சுயேச்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து பதவி வகிப்பதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (26) தொடங்கியுள்ளது. அர்ச்சுனா ராமநாதன் அரசாங்க மருத்துவ அதிகாரியாக பணியாற்றும் போது தேர்தலுக்கான வேட்புமனுவை சமர்ப்பித்ததாகக் கூறப்படுகின்றது. அரசுப் பணியில் இருந்து முதலில் ராஜினாமா…

தமிழரசு நிலைப்பாட்டை சிறீதரன் சொன்னார்!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது இனமேலாதிக்கம் மிகுந்திருக்கும் இலங்கைத் தீவில் சாத்தியமற்றது.அதனால் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வகையிலான சர்வதேச விசாரணைக்கு வழிசெய்யுமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கை வந்துள்ள ஐக்கிய…

பொருளாதாரம் தொடர்பில் நாமலுக்கு சரியான கவலை!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் நிர்வாகத்தில் முழு குழப்பம் இருப்பதாகத் தெரிகிறது. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனது அரசாங்கம் 96 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்ததாக ஜனாதிபதி ஆரம்பத்தில் கூறியிருந்தாலும், அவரது அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அந்த எண்ணிக்கை 650 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று கூறினார்,” என்று நாமல் ராஜபக்ச…

பொதுமன்னிப்பென தப்பித்தோர் விவகாரம் சூடுபிடிக்கிறது!

குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) நடத்தி வரும் விசாரணைகளில், 30 கைதிகள் எந்த அதிகாரபூர்வ ஆவணங்களும் இல்லாமல் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது. ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில் கைதிகளை சட்டவிரோதமாக விடுவித்தது குறித்து சிஐடி விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. அந்த விசாரணையின் ஒரு பகுதியாக இந்த தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், முன்னாள்…

அடுத்து மகிந்த,ரணில் மற்றும் மைத்திரியாம்?

குடும்பங்களாக முன்னாள் அமைச்சர்கள் கைதாகிவருகின்ற நிலையில் அடுத்து முன்னாள் ஜனாதிபதிகள் கைது அரங்கேறலாமென தகவல்கள் வெளிவந்துள்ளது. அவ்வகையில் மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர்கள் பசில் ராஜபக்ச, ஹரிசன், விஜித் விஜிதமுனி டி சொய்சா, லகஸ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் லகஸ்மன் வசந்த பெரேரா ஆகியோர் கைதாகலாமென கூறப்படுகின்றது. இலங்கை பணத்தில்…

குடும்பமாக சிறை சென்று திரும்பிய ஹெகலிய?

முன்னாள் அரச அமைச்சர்கள் சிறை செல்வது தொடர்கையில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி குசும் ரம்புக்வெல்ல மற்றும் மகள் சந்துலா ரம்புக்வெல்ல ஆகியோர் மீண்டும் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான  ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குமூலங்களை பதிவு செய்ய அழைக்கப்பட்ட…