Category கொழும்பு

தேர்தலிற்கு இடைக்கால தடை?

யாழ்.மாநகரசபை தேர்தலிற்கான பணிகளை இடைநிறுத்த இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் நடவடிக்கைகளை புதன்கிழமை (02) வரை இடைநிறுத்துமாறு தொடர்புடைய தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுக்களை, ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முகமது…

மோடிக்கு பரிசு:மாகாணசபை கிடையாது!

இவ்வாண்டினில் மாகாணசபை தேர்தல்கள் நடைபெறாதென அனுர அரசு அறிவித்துள்ளது.இந்திய பிரதமர் மோடி இவ்வாரம் இலங்கை வர உள்ள நிலையில் தேர்தல் இல்லையென்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் ஆறு மாதங்களுக்குள் மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டதால்இ மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது என்று அனுர அரசின் ஊடகப்பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்கம்…

வியாழேந்திரனுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் ஏப்ரல் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  இலஞ்சம் கொடுக்க உதவியதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரை ஏப்ரல் 8 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 1) கொழும்பு மாஜிஸ்திரேட்…

வசந்த கரன்னாகொட – ஜகத் ஜெயசூரிய கொலையாளிகளே:சரத் பொன்சேகா!

இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு எதிரான தடைகள் நியாயமானவை என, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஆனால் முன்னாள் தலைவர் சவேந்திர சில்வாவுக்கு எதிரான, ஐக்கிய இராச்சியத்தின் சமீபத்திய தடைகள் நியாயமற்றவையெனவும் தெரிவித்துள்ளார்.  உண்மையில் உள்நாட்டு…

தேர்தல் குண்டு!:ஈஸ்டர் குற்றவாளிகள் அம்பலப்படுத்தப்படுவர்!

தேர்தல் குண்டு!:ஈஸ்டர் குற்றவாளிகள் அம்பலப்படுத்தப்படுவர்! 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பதாகக் கூறப்படும் குழுவை அம்பலப்படுத்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தற்போது பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சாமர சம்பத்-வியாழேந்திரன் ஒரே அறையில்?

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாந்திரனும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் எம் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு வர அனுமதிக்குமாறு எழுத்துப்பூர்வ கோரிக்கை விடுத்துள்ளார்.…

நாமலின் பணமோசடி வழக்கில் இருந்து கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ திட்டம் தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பணமோசடி வழக்கில் இருந்து கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று (27) விலகுவதாக அறிவித்துள்ளார். சனத் பாலசூரிய மற்றும் பொத்தல ஜெயந்த என்ற இரண்டு நபர்கள் தனக்கு எதிராக சமூக ஊடகங்களில்…

ஜெயகுமாரி அனுரவிடம் கோரிக்கை!

ஜெயகுமாரி அனுரவிடம் கோரிக்கை! முல்லைதீவை சேர்ந்த பெண்மணியான பாலேந்திரன் ஜெயகுமாரி தனது மகன் – பாலேந்திரன் மஹிந்தன் பற்றிய தகவல்களை வெளியிடக் கோரி ஜனாதிபதி அலுவலகத்தின் மக்கள் தொடர்புப் பிரிவுக்கு ஒரு கடிதத்தை இன்று வழங்கியுள்ளார். தனது சிறுவயது மகளுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மகனிற்காக நீதி கோரிய நிலையில் கோத்தபாய அரசினால் மீள சிறையில்…

போர்க்குற்றச்சாட்டு:நல்லிணக்க படகை மீண்டும் ஆட்டுகின்றது!

போர்க்குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள படையினரை தண்டிப்பது தேசிய மக்கள் சக்தியின் இன நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கின்றது. அவ்வகையில் பிரிட்டனின் தடை தொடர்பில், அத்தகைய இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான பிரிட்டிஸ் உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கிடம்  இன்று  புதன்கிழமை (26) தெரிவித்துள்ளார்.  “இலங்கை உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள்…

கூட்டணியின் முதல் ஆடு:வியாழேந்திரன் உள்ளே!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வியாழேந்திரனை கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. முன்னதாக மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்னும் கூட்டமைப்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர்…