Category கிளிநொச்சி

செம்மணியில் அரசியல் தலையீடுகள் இல்லாமல் விசாரனைகளை மேற்கொள்ளபடும்

செம்மணி புதைகுழிக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமே நீதியை நிலைநாட்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்தார் கிளிநொச்சி கரைச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் இறுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார். மேலும் தெரிவிக்கையில்  செம்மணி படுகொலை சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்…

ஊடகவியலாளர் கிருஷ்ணகுமார் காலமானார்

மூத்த ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் சுகயீனம் காரணமாக தனது 52 வயததில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலமானார். கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் கடந்த காலத்தில் பல்வேறு பத்திரிகையில் கடமையாற்றியதோடு 1999 ஆம் ஆண்டு முதல் இறுதி யுத்தக்காலம் வரை புலிகளின் குரல், தமிழீழ வானொலி என்பவற்றில் தொடர்ச்சியாக கடமையாற்றியவர். யுத்தக் காலப்பகுதியில் கடுமையான…

ரணில் ஒரு பேயன்!

ரணில் ஒரு பேயன். அவன் உலகம் சுற்ற செலவு செய்த கணக்கு வழக்கு எத்தனை கோடியென தெரியுமாவென பொதுவெளியில் முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவை திட்டித்தீர்த்துள்ளார் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன். இன்றைய தினம் பூநகரி பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணிலை திட்டிதீர்த்துள்ளார் தேசிய மக்கள்…

பளை சிறீ தமிழரசிடம்!

கிளிநொச்சியிலுள்ள மூன்றாவது உள்ளுராட்சி சபையான பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சிறீதரன் ஆதரவு  தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சுப்பிரமணியம் சுரேன் ஏக மனதாக தெரிவு செய்யப்படடுள்ளார். பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவின் போது இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் சுப்பிரமணியம் சுரேனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது ஏனைய தெரிவு இல்லாத நிலையில் சுப்ரமணியம் சுரேன் தெரிவு செய்யப்பட்டார். பச்சிலைப்பள்ளி…

இனத்துவ உணர்வுள்ள அடுத்த தலைமுறையின் உருவாக்கமே தமிழ் தேசியத் தளத்தின் அரண் – சிறீதரன்

இனத்துவ உணர்வுள்ள அடுத்த தலைமுறையின் உருவாக்கமே தமிழ் தேசியத் தளத்தின் அரணாகும் என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். சிறீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் 2.1 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட கல்லூரியின் பிரதான மண்டபத்தை மாணவர்களின்…

பூநகரி பிரதேச சபையின் முதலாவது கன்னி அமர்வு ஆரம்பம்

கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையின் முதலாவது கன்னியமர்வானது சபையின் தவிசாளர் சிவகுமாரன் சிறீரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது. இருபது உறுப்பினர்களைக்கொண்ட பூநகரி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக பத்து உறுப்பினர்களும்,தேசிய மக்கள் சக்தி சார்பாக. மூன்று  உறுப்பினர்களும்,ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக மூன்று உறுப்பினர்களும் ,ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாக  ஒரு உறுப்பினரும்,  அகில…

கிளிநொச்சி இளைஞன் காரைக்காலில் கைது

கிளிநொச்சி இளைஞன் காரைக்காலில் கைது உரிய ஆவணங்கள் எதுவுமின்றி தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த இலங்கையைச் சோ்ந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்டுள்ளவர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 35 வயதான அஜந்தன் என்பது தெரியவந்துள்ளது.  பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவரிடம் எந்த ஆவணமும் இல்லை என்பது தெரிய…

புதிய தமிழரசின் பங்காளி டக்ளஸ் கொலையாளி:சிறீதரன்!

உள்ளுராட்சி சபைகளை கைப்பற்ற ஈபிடிபி கட்சியுடன் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் பேச்சுக்களை நடத்தியுள்ள நிலையில் முன்னாள் தலைவர் மாவை. சோ.சேனாதிராஜவை படுகொலை செய்ய முயன்ற ஒட்டுக்குழுத் தலைவரே டக்ளஸ் தேவானந்தா என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சுமத்தியுள்ளார். ஊர்காவற்றுறை மக்களைச் சந்திப்பதற்காகச் சென்ற…

முன்மாதிரி:முன்னுதாரணமாக பணிகளை ஆரம்பித்தது பூநகரி

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை தலைமைத்துவமாக கொண்டமைந்த உள்ளுராட்சி மன்றங்களில் பூநகரி பிரதேசசபையே இலங்கை முழுவதுமாக உள்ள சபைகளில் முதலாவதாக தனது பணியை ஆரம்பித்துள்ளது. வடக்கிலுள்ள 37 உள்ளுராட்சி சபைகளில் நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையினை பெற்றுக்கொண்ட உள்ளுராட்சி மன்றங்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களிலேயே உள்ளன. அவ்வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி மற்றும் கரைச்சி…

தமது கட்சிக்கு எதிராகவே போராடிய தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் – திரும்பி சென்ற அமைச்சர்

கிளிநொச்சியில்  இளைஞர் கழக நிர்வாக தெரிவின் போது தேசிய மக்கள் சக்தியின் சார்பில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், ஆதரவாளர்களால் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இளைஞர் கழக நிர்வாக தெரிவிற்கு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை பிரதி அமைச்சர் எரங்க குணசேகர வரவிருந்த நிலையில் இயக்கச்சி மக்கள், தேசிய…