Category - கிளிநொச்சி

1
மாங்குளத்தில் குளவிகள்!

மாங்குளத்தில் குளவிகள்!


முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் பாடசாலை மாணவர்களை குளவிகள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில்; குளவிக்கூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் வீதியால் சென்றோரை தாக்கியுள்ளன.அச்சமயத்தில் அவ்வீதியால் பயணித்த இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரி ஒருவர் உட்பட 5 மாணவர்களை  குளவிகள் கொட்டியுள்ளன. குளவிகள் கொட்டியதில் பாதிப்படைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  அதில் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியிருந்த   முல்லைத்தீவு துணுக்காய் பிரதிக் கல்விப் பணிப்பாளராக  பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செபாஸ்டியன்பிள்ளை அந்தோணி ஜார்ஜ்  (53 வயது) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.அதேவேளை குளவிக்கொட்டுத் தாக்குதலுக்குள்ளான  5 பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனிடையே மாங்குளம் நகரை போக்குவரத்து மத்திய நிலையமாக மாற்றியமைக்க வடக்கு ஆளுநர் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2026. Created by Meks. Powered by WordPress.