Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பூநகரியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகரி தம்பிராய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர். சரமாரியாக மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் குறித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் பூநகரி செம்பங்குன்று பகுதியைச்…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேலும் இரண்டு அமைச்சர்களை நியமிக்க உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில் தற்பொழுது 23 பேர் அங்கம் வகிக்கின்றனர். இந்த எண்ணிக்கையை 25 ஆக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் வாரங்களில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பிரதி சபாநாயகர் ரிஸ்வி…
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த 140 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,757 குடும்பங்களைச் சேர்ந்த 10,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். பெய்து வரும் பலத்த மழையை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள பல நீர்த்தேக்கங்களில் பல வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும்…
இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்களின் பெயர்களை அறிவித்து புதுப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 15 அமைப்புகள் மற்றும் 217 நபர்களின் பெயர் விபரங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழர் புனர்வாழ்வு அமைப்பு,…
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்தது. அதன்படி, அந்தப் பெயர்களைக் குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் சனிக்கிழமை தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட உள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், கடந்த பெப்ரவரி 17 ஆம்…
டெடி பியர் பொம்மைக்குள் வைத்து போதைப்பொருள் கடத்தல் – கட்டுநாயக்கவில் ஒருவர் கைது கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனையில் 10 கிலோ 323 கிராம் கொகெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, இந்த போதைப்பொருளை விமானம்…
யாழ் வடமராட்சி கிழக்கு தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி சபை வேட்பாளர்களிடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது கடற்தொழில் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன்,ரஜீவன் ஆகியோருக்கு வேட்பாளர்களால் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடமராட்சி கிழக்கில் அபிவிருத்தி திட்டங்களை கருத்தில் கொண்டு உங்களால் நியமிக்கப்பட்ட மாடசாமி செல்வராசா(ஷாம்)அவர்களை வடமராட்சி கிழக்கு பிரதேச சபை உறுப்பினராக…
நாட்டில் அனைவரும் அமைதிக்காகவே யுத்தத்தில் ஈடுபட்டதாக தேசிய போர் வீரர் தினத்தன்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்த கருத்துடன் என்னால் உடன்பட முடியாது, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்? என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவப்…
தமிழ் தரப்புக்கள் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் நாள் தோறும் முட்டிமோதிவரும் நிலையில் தமிழரசுக்கட்சிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்களிடையே பேச்சுக்கள் நடபெறவுள்ளது.கதிரைகளை தக்கவைப்பது தொடர்பில் தமிழரசுக்கட்சி பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமிடையே பேச்சுக்கள் நடைபெறவுள்ளது. இதனிடையே வவுனியா மாநகரசபை உட்பட சில…
இலங்கை கடற்படையினரின் விசேட நடவடிக்கையின் போது ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் 600 கிலோ கிராம் மீட்கப்பட்டுள்ளதுடன் , அவற்றினை கடத்தி சென்ற 02 மீன்பிடி படகுகளுடன் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் போதைப்பொருட்களை கொண்டு சென்ற இரண்டு உள்ளூர் பல நாள் மீன்பிடி படகுகளுடன் குறித்த 11 சந்தேக நபர்களை…