Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
வரவு செலவுத் திட்டதிண்டாட்டம்! 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதற்கமைய 2025 ஆம் ஆண்டிற்கான வருவாய் ரூ.4,990 பில்லியனாகவும், செலவீனங்கள் ரூ.7,190 பில்லியனாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி வரவு செலவுத் திட்ட வருமான மிகை பற்றக்குறை ரூ.2,200 பில்லியனாகும்.
வேர் வரை ஊழல் ஒழிக்கப்படும் அதற்காக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் திங்கட்கிழமை வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத நிதி நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை…
டுபாயில் உள்ள இலங்கை தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் மோசடி குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். டுபாயை தளமாகக் கொண்ட இந்த கடத்தல்காரர்கள், கப்பம் பெறும் நோக்குடன் இலங்கையில் உள்ள ஏனையவர்கள் பயன்படுத்தி வரும், தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி மோசடி செய்து பணம் பறிப்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. ஒவ்வொரு நபருக்கும் அவர்கள் பயன்படுத்தும் தொலைபேசி…
பாடசாலை மாணவர்களை வெயிலில் வெளியே விட வேண்டாம் எனவும், தற்போது நிலவும் வெப்பமான வானிலையால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். இல்லங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது குறித்த வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய ஒரு சுற்றறிக்கையை அமைச்சகம் வெளியிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சுற்றறிக்கை வெளியிடுவதற்கு முன்பு…
சுதந்திர இலங்கையின் 79ஆவது வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் முன்வைத்தார். 2025 ஆம் ஆண்டு 5% பொருளாதார வளர்ச்சியை அடைவது பிரதான இலக்காகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். மட்டுப்படுத்தப்பட்ட வகையில் தான் இம்முறை வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.…
அதானியின் இலங்கையிலிருந்தான வெளியேற்ற அறிவிப்பின் பின்னராக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையே ஒரு சந்திப்பு நடந்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இந்த சந்திப்பு நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எரிசக்தி அமைச்சருக்கும் இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான…
மின்னணு கடவுச் சீட்டு (E-Passport) வழங்கும் முறையை செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளதால், அந்த முறையை செயல்படுத்துவதில் எந்த தடையும் இல்லை என்று நீதி பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.…
மூத்த ஊடகவியலாளர் சீதா ரஞ்சனி காலமானார் மூத்த ஊடகவியலாளர் சீதா ரஞ்சனி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமைஅநுராதபுரத்தில் காலமானார். எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் என்ற பன்முக ஆளுமை கொண்ட சீதா ரஞ்சனி, சுயாதீன ஊடக இயக்கத்தின் அழைப்பாளராக விளங்கியவர். ஊடகத்துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவராவார்.
2021ஆம் ஆண்டு அரசாங்க ஆயுதக் களஞ்சியசாலையில் இருந்து காணாமல் போன T56 ரக துப்பாக்கியுடன் கடற்படை சிப்பாய் ஒருவர் குளியாப்பிட்டிய இலுக்கேன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். குளியாப்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளின் உதவியுடன் கடற்படை தலைமையக அதிகாரிகள் குழுவினால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரான கடற்படை சிப்பாய் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்…
சுமார் 36 கோடி ரூபாய் பெறுமதியான “ஹஷிஷ்” போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கனடாவின் டொராண்டோவிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி ஊடாக நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இலங்கைக்கு வந்தபோது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்…