Category இலங்கை

இலங்கை வரும் மோடி

இலங்கை வரும் மோடி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் முதல் இரு வாரங்களுக்குள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இருப்பினும், விஜயம் குறித்த திகதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.  இந்திய பிரதமர் நாட்டிற்கு வருகை தருவார் என்று இந்திய உயர் ஸ்தானிகராலயமும் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குஷ் போதைப்பொருளுடன் தாய்லாந்து பிரஜை கைது!

குஷ் போதைப்பொருள் தொகையுடன் நாட்டிற்குள் நுழைய முற்பட்ட வெளிநாட்டு விமானப் பயணி ஒருவர் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் வருகை முனையத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 34 வயதுடைய தாய்லாந்து நாட்டவர் எனவும், தாய்லாந்தின்…

யாழ். வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக நிறுத்தம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மட்டுப்படுத்தப்பட்டளவில் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இடைநிறுத்தியுள்ளது.  வைத்தியசாலை நிர்வாகத்திற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டு தீர்வு எட்டப்படாவிடில் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பை நடத்தவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் திட்டமிடப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து…

3 கோடி ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்களுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது!

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுமார் 30 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோதமாக கடத்தப்பட்ட உயர் ரக ஸ்மார்ட் போன்கள் நாட்டிற்கு கடந்தி வந்த பயணி ஒருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கிரீன் சேனல் வழியாக கையடக்கத் தொலைபேசிகளை நாட்டிற்குள்…

அர்ச்சுனா, சாணக்கியனால் சபையில் அமைதியின்மை

மட்டக்களப்பில் இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பாக சபையில் கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஒலிவாங்கியை இடைநிறுத்தியதை அடுத்து சபையில் இன்று (04) அமைதியின்மை ஏற்பட்டது.  கடந்த 20 ஆம் திகதி, மட்டக்களப்பு ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது, ​​மர்மக் குழு ஒன்று வாள்களால் தாக்கியதில் இருவர் படுகாயமடைந்தனர். …

விமானப்படைக்கு புதிய பதவி நிலை பிரதானி நியமனம்

விமானப்படைக்கு புதிய பதவி நிலை பிரதானி நியமனம் ஆதீரா Tuesday, March 04, 2025 இலங்கை இலங்கை விமானப்படையின் புதிய பதவி நிலை பிரதானியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. தற்போது விமானப்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர்…

ஹட்டனில் தீ – 12 வீடுகள் தீக்கிரை

ஆதீரா Tuesday, March 04, 2025 இலங்கை ஹட்டன், செனன் தோட்டத்தின் கே.எம் பிரிவில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட  தீ விபத்தில் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் தோட்ட தொழிலாளர்களின் பொருட்கள் மற்றும் உடமைகள் தீக்கிரையாகியுள்ளன தீ விபத்துக்கான காரணம் மின்சாரக் கசிவு…

நிர்வாணமாக உந்துருளி ஓடியவர் கைது!

கொழும்பிலிருந்து கண்டி நோக்கி நிர்வாண கோலத்தில் உந்துருளியில் பயணித்த நபரொருவரை இன்று திங்கட்கிழமை (3) காலை கடுகண்ணாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட நபர் அஹங்கம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.  கொழும்பு – கண்டி வீதியில் நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இந்த நபரை இடைமறித்துப் பிடிக்க கேகாலை,…

2025 உள்ளூராட்சித் தேர்தல்: வேட்புமனுக்கள் மார்ச் 17 முதல் 20 வரை ஏற்றுக்கொள்ளப்படும்

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17 ஆம் திகதி முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான பாதுகாப்புப் பணத்திற்கான வைப்புத்தொகை மார்ச் 3 ஆம் திகதி முதல் மார்ச் 19 ஆம் திகதி நண்பகல் 12 மணி…

சிற்றூர்தி விபத்து: 14 பள்ளிச் சிறுவர்கள் காயம்!

இத்தினபுரி மாவட்டத்தில் உள்ள குருவிட்ட காவல் பிரிவின் சாயகந்த பகுதியில், எரட்டவிலிருந்து சாயகந்த நோக்கிச் சென்ற சிற்றூர்தி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள மரத்தில் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது சிற்றூர்தியில் 11 முதல் 14 வயதுக்குட்பட்ட 14 பள்ளி குழந்தைகளும். ஒரு பெண்ணும் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  காயமடைந்த 14…