Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த இலங்கை வந்த இந்திய மீனவர்கள் பிரதிநிதிகளில் ஒருவர் இலங்கையில் இருந்து தப்பியோடியுள்ளார் இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் பேச்சுக்களை நடாத்த இந்தியாவில் இருந்து மீனவர்களின் பிரதிநிதிகள் ஐவர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தனர். குறித்த ஐவரில் ஒருவரின் படகு கடந்த மாதம் மன்னார்…
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன எனவும், அதனால் அரசின் இராஜதந்திர அணுகுமுறைகள் பலவீனமடைந்துள்ளன என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அல்ஜசீரா செய்தி சேவை நெருக்கடிக்கு உள்ளாக்க திட்டமிட்டு செயற்பட்டிருந்தது. இதன் பின்னணியிலும் தமிழீழ விடுதலைப்…
நாட்டை நிர்வகிக்க முடியாத, இயலுமையற்ற அரசாங்கமே நாட்டில் காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில், எமது நாட்டினது சுகாதாரத் துறையில்…
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. விசேட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிவரும் கான்ஸ்டபிள் மற்றும் தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது. கடந்த பெப்ரவரி 17 முதல் மார்ச் மாதம் 19 வரையான…
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆழியவளை பகுதியில் உள்ள குறித்த குடும்பஸ்தரின் வீட்டுக்குள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி உள் நுழைந்த வன்முறை கும்பல் , வீட்டில் இருந்த உடைமைகளை சேதப்படுத்தியதுடன் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில். …
உள்ளுராட்சி தேர்தல் பரபரப்புக்களின் மத்தியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்பதைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் ஜனாதிபதி…
அனுராதபுரம், எப்பாவல பகுதியில் உள்ள ஒரு மடத்தில் வசித்து வந்த பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர், கட்டுநாயக்க பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் தொலைபேசித் தரவை பகுப்பாய்வு செய்த போது கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் அனுராதபுரம், எப்பாவல, கிரலோகம…
மதுபோதையில் தனியார் பேருந்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற சாரதியின் சாரதி உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்ய உத்தரவிட்ட பாணந்துறை நீதவான் சம்பிகா ராஜபக்ஷ 40 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளார். தனியார் நிறுவன ஊழியர்கள் குழுவை ஏற்றிக்கொண்டு பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த பேருந்து, பாணந்துறை நல்லுருவப் பகுதியில் நிறுத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்டபோது, சாரதி…
சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய தம்பதியினர் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். சுமார் 30 வயதான இந்திய தம்பதியினர், அவர்களது 6 வயது பிள்ளையுடன் நாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து சிறிலங்கன் விமானம் மூலம் இந்த தம்பதியினர் இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்கள்…
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி நாட்டில் உணவுப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசிகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் திலங்க ருவான் பத்திரன இதனை தெரிவித்தார். நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த டைபாய்டு காய்ச்சல்…