Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய வரி கொள்கையை நடைமுறைப்படுத்தல் மூன்று மாதங்களுக்கு மாத்திரமே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களின் பின்னர் நாம் இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். எனவே அரசாங்கம் இதனை ஒரு அவசர நிலைமையாக அறிவித்து, நடைமுறைப்படுத்தவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற கடத்தல் தொடர்பிலேயே தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார், அரசாங்கம் தெரிவிப்பது போல உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் தடுத்துவைக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையானை தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார் நபர் ஒருவரை கடத்த உதவியது…
பிள்ளையானைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். குற்றச்செயல்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட உள்ளதாகவும் இவ்வாறானவர்கள் தொடர்பிலான நீண்ட பட்டியலொன்று காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்லும் எவரும் தாம் குற்றம் இழைத்து…
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் நேற்று முன்தினம் இலங்கையின் மிகப்பெரிய பால் சோற்றை தயாரித்துள்ளனர். சிறைச்சாலை சமையலறையில் பணிபுரியும் 50 கைதிகளின் உதவியுடன் பால் சோறு தயாரிக்கப்பட்டுள்ளது. 400 கிலோகிராம் பச்சை அரிசி மற்றும் 705 தேங்காய், 60 கிலோ வெங்காயம், 12 கிலோ காய்ந்த மிளகாய், 7…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்றைய தினம் புதன்கிழமை தபால் நிலையங்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார். வாக்காளர் அட்டைகளை ஏப்ரல் 20 ஆம் திகதி விநியோகிப்பதற்கான விசேட நாளாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளார். இது குறித்து தபால் மா அதிபர் ருவன் சத்குமார மேலும்…
பானம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பானம பகுதி கடலில் நீந்திக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை நடந்ததாக பானம பொலிஸார் தெரிவிக்கின்றனர். காணாமற்போன இளைஞர்கள் 23 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் மத்திய பானம பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பானம பொலிஸார் மேலதிக…
உள்ளூராட்சிமன்றத்தேர்தலுக்கான வேட்புமனுக்களில் பிறப்புச்சான்றிதழ் அத்தாட்சிப்படுத்தல் மற்றும் சத்தியக்கடதாசி குறைபாடுகள் என்பவற்றுடன் தொடர்புடையவகையில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் இருவேறு தீர்ப்பினை வழங்கியிருக்கும் நிலையில், இது சமச்சீரற்ற தேர்தலொன்று நடைபெறுவதற்கான வாய்ப்பினைத் தோற்றுவித்திருக்கிறது. எனவே இது குறித்து சட்டமா அதிபர் உடனடியாக உயர்நீதிமன்றத்தினைநாடி உரிய தீர்வைப் பெற்றுத்தரவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி…
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை உறுதிப்படுத்தினார். தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் தொலைபேசிமூலம் உரையாட அனுமதிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி…
எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிட்டிய – அம்பலாங்கொட வீதியில் உள்ள குருந்துகஹா நகரில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொடையில் இருந்து எல்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் இருந்து வந்த வேன் ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில்…
“ஒரு வளமான நாடு மற்றும் ஒரு அழகான வாழ்க்கையை” நோக்கமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) எதிர்காலத்தில் ஒழிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தின் முசலி தேர்தல் பிரிவில் உள்ள சிலாவத்துறை பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்…