Category இலங்கை

கொலை மயம்:நடமாட முடியவில்லையென்கிறார் றிசாட்!

நாட்டில் தொடர்;ச்சியாக இடம்பெற்று வரும் கொலைகள் பாதுகாப்பு நிலைகுலைந்து மக்கள் அச்சம் கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளதென முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டில் தொடர்ச்சியாக அரங்கேறும் பாதாள உலக கோஸ்டியினுடைய கொலைகள்  நாட்டின் பாதுகாப்பு நிலைகுலைந்து மக்கள் அச்சம் கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,…

கண்டிக்கு செல்ல வேண்டாம்

கண்டிக்கு செல்ல வேண்டாம் மறு அறிவித்தல் வரும் வரை கண்டி நகரத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த அனைத்து குடிமக்களையும் கோரியுள்ளார்.  விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.  ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக கண்டியில் ஏற்கனவே 300,000க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் கூடியிருப்பதால் இந்த…

பெண்ணை படுகொலை செய்து , பயணப்பைக்குள் சடலத்தை எடுத்து சென்றவருக்கு மரண தண்டனை

கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள ஒரு விடுதியில் பெண்ணொருவரை கொலை செய்து, அவரது உடலை ஒரு பயணப் பைக்குள் அடைத்து, பின்னர் கொழும்பு பெஸ்டியன் வீதியில் உள்ள பேருந்து நிறுத்தமொன்றில் வைத்துச் சென்றிருந்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.  2015 ஆம் ஆண்டு கொழும்பு செட்டியார்…

தலைக்கவசத்துடன் நடமாடினால் சோதனை

பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தபட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது.  கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் உள்ளிட்ட பல குற்றங்களைச் செய்த சந்தேகநபர்கள் தலை மற்றும் முகங்களை…

அமெரிக்க தீர்வை வரி பேச்சுவார்த்தை வெற்றியாம்

இலங்கை மீது அமெரிக்கா விதித்த ‘உயர் தீர்வை வரியை’ திருத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், இந்த விடயம் தொடர்பாக இரு தரப்பினரும் கூட்டு அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  இரத்தினபுரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  “பலர் எம்மிடம் கேட்கிறார்கள், நீங்கள்…

அனுர மோடி ஒப்பந்தம் வெளிவரும்?

அண்மையில் இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பில் அனுர அரசு தொடர்ந்தும் திருட்டு மௌனம் காத்துவருகின்றது இந்நிலையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்றும், சில தகவல்களை வெளியிட இரு தரப்பினரின் ஒப்புதல் தேவைப்படுவதால் சிறிது காலம் எடுக்கும் என்றும் அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்;. இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு…

டேன் பிரியசாத் கொலை – மூவர் கைது

சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்தக் கொலையை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த காஞ்சிபானை இம்ரானின் பிரிவினர் செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.   வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் இடம்பெற்ற விருந்து உபசார…

டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு

டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு ஆதீரா Tuesday, April 22, 2025 இலங்கை சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத் மீது இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு   துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் லக்சந்த சேவன வீட்டு வசதி வளாகத்தில் அவர் மீது துப்பாக்கிச் சூடு…

நீர்கொழும்பில் தொழிலதிபர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றையவர் தப்பி சென்றுள்ளார்.  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  நீர்கொழும்பு பகுதியில் உள்ள தொழிலதிபரின் வீட்டுக்கு , வட்டிக்கு பணம் தேவை என கூறி இருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அவர்களை வீட்டுக்குள் அழைத்து தொழிலதிபர் உரையாடிக்கொண்டிருந்த வேளை…

தேர்தல்கள் ஆணைக்குழு பாரபட்சமாக செயற்படுவதாக ஜீவன் எம்.பி குற்றச்சாட்டு

தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாகவும், ஜனநாயக ரீதியாகவும் இயங்க வேண்டிய ஒரு அமைப்பு என்றும், இருந்தும் தேர்தல் ஆணைக்குழுவின் பக்கசார்பான செயற்பாடுகள் வருத்தத்திற்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.  நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடனான கலந்துரையாடல் நேற்றைய தினம் திங்கட்கிழமை தேர்தல் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றிருந்தது.  இக்…