Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர்களை கைப்பேசிகளை கையாளுவதற்கு பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். விஹாரமகா தேவி பூங்காவில் நடைபெற்ற தேசிய முன்பிள்ளை பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி வாரத்தின் இறுதி நாளில் கலந்து கொண்ட போதே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். கைப்பேசி பயன்பாடு இளம்…
யுத்தம் நடந்த மண்ணில் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்றது என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் கருத்துரைக்கும்போதே இவ்வாறு கூறினார். மேலும் தெரிவிக்கையில், வடக்கு யுத்தம் நடந்த மண். இந்த மண்ணில் மனிதப்…
செம்மணியை பிரித்து போர்க்காலத்தில் இடம்பெற்ற விடயங்களை பிரித்துவைப்பது பாதிக்கப்பட்ட மக்களிற்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செம்மணி ஜெனீவாவில் இருக்கின்ற சர்வதேச சமூகம் அதனை கொச்சைப்படுத்தி முடக்குகின்ற கடைசிகட்டத்தை மாத்திரம் விசாரிக்க சொல்கின்ற அந்த முயற்சியை கேள்விக்குட்படுத்தி, அது விரும்பியளவிற்கு பின்னிற்கு சென்று மக்களிற்கு…
கண்டியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்து கண்டி- ஹுன்னஸ்கிரிய – மீமுரே வீதி ஹபரகெட்டிய பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனம் பள்ளத்தில் விழுந்து நேற்றைய தினம் சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. விபத்தில் இரு பெண்கள், ஆண் என மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு…
இலங்கைக்கான படையெடுப்பு? தூயவன் Saturday, July 19, 2025 இந்தியா, இலங்கை தென்னிந்திய நடிகர்களது இலங்கைக்கான படையெடுப்பு தொடர்கின்றது. இந்நிலையில் இந்திய நடிகரும் தயாரிப்பாளருமான ஜெயம் ரவி என்றழைக்கப்பட்ட ரவி மோகன் மற்றும் பாடகி கெனீஷா பிரான்சிஸ் ஆகியோருடன் வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் கலந்துரையாடியுள்ளார். திரைப்பட தயாரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சிகளில் புதிய திட்டங்களைப் பற்றி இதன்போது…
கடல் வழியாக கொண்டு வரப்பட்ட அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் புத்தளம் தலவில மற்றும் நாவக்காடு பகுதிகளில் நடத்திய கூட்டு சோதனையில் அகப்பட்டுள்ளது, கடல் வழியாக கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் சுமார் ரூ.30 மில்லியன் மதிப்புள்ள ஐந்து உயர் சக்தி மோட்டார் சைக்கிள்கள் சந்தேக நபர்களுடன் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பறிமுதல் செய்யப்பட்ட…
கொலைக் குற்றவாளிகளைப் பாதுகாக்கவே ரணில் – ராஜபக்ஷ தரப்பு ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்ட திறமையான அதிகாரிகளைப் பதவியில் இருந்து நீக்கியது. ஆனால், எமக்கு எந்தத் தனிப்பட்ட தேவையும் கிடையாது எனவே, நாம் விசாரணைகளுக்காகத் திறமையான அதிகாரிகளை ஈடுபடுத்துவோம். கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்போம். அவர்கள்…
அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, வசந்த சமரசிங்கவுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முன்னிலையான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் இலஞ்சம்…
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘படுகொலைக்கு எதிராக எழுச்சி கொள்வோம்’ எனும் தொனிப் பொருளில் நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் கலந்துகொண்டோர்,’புத்த தேசமா? புதைகுழிகள் தேசமா?, செம்மணயில் எலும்புகளாக எம்மவர்கள், சர்வதேசமே தமிழர்களை ஏமாற்றாதே..!, யுத்த குற்றத்தின் சாட்சி செம்மணி,…
சட்டத்தரணி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு வெலிகம – உடுகாவ பகுதியில் இன்று (16) அதிகாலை 4.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சட்டத்தரணி ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், வீட்டின் வாயிலை குறிவைத்து துப்பாக்கிச்…