Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரனுக்கு எதிராக அவதூறு பரப்பிய ஆறு சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் தனக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் பொய்யான தகவல்களைப் பரப்பிய ஆறு சமூக ஊடக கணக்குகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடொன்றை அளித்துள்ளார். ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை…
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் தொடர்பில் இலங்கை குற்றப்புலனாய்வுப்பிரிவினரிடம் வாக்குமூலமளிக்க அசாத் மௌலானா பச்சைக்கொடி காட்டியிருப்பதாக தெரியவருகின்றது. தனக்கான பாதுகாப்பு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் வாக்குமூலமளிக்கத் தயாராக இருப்பதாக அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள ‘உளவுத்துறை’ என்று அழைக்கப்படும் ஆயுதமேந்திய உளவு சேவைகளுடனான இரகசிய தொடர்பு குறித்த ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலினில்…
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை பாராளுமன்றம் செய்து தரவேண்டும். நாம் இதற்காக தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கிறோம் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பிரமணியம் அச்சுதன் தெரிவித்தார். ஊடகம் ஒன்றிற்கு அவர் மேலும் தெரிவித்ததாவது முன்னாள் எம்.பி. சுமந்திரன் கொண்டுவந்த தனிநபர் பிரேரணை போன்ற ஒன்றை தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்…
இந்தியாவின் அனுமதியுடன் தான் கைச்சாத்திடப்பட்ட 7 ஒப்பந்தங்களையும் பகிரங்கப்படுத்த முடியும் என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது.ஒப்பந்தத்தில் எவ்விடத்திலும் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். எதுல்கோட்டை பகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அங்கு…
வாய்ப்பு கிடைத்தால் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன. ரணில், சஜித் இந்நாட்டின் ஜனாதிபதியாக வேண்டுமென நினைத்தால் அது அவர்களது நிறைவேறாத கனவாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். வலல்லாவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இவ்வாண்டு டிசம்பரில்…
ஆதீரா Saturday, April 26, 2025 இலங்கை நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்து உற்பத்தி தொடர்பான நிபுணத்துவம் கொண்ட தரப்பினரின் பற்றாக்குறையின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும்…
முல்லைத்தீவில் அமைச்சர் சந்திரசேகரனின் ஆதரவாளர்கள் மீன்பிடிதொழிலாளர் சங்கத்தின் தலைவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. நேற்றைய தினம் வடமாகாணத்தில் கடந்த 15 வருடங்களாக வேருன்றியுள்ள வடமாகாணத்தை சாரத ஒரு அமைச்சர் , இராமலிங்கம் சந்திரசேகரன் தேர்தல் பிரச்சார…
தேசிய மக்கள் சக்தியை வெற்றிகொள்ள வேண்டுமானால், மோசடி மற்றும் ஊழலை நிறுத்திக்காட்டுங்கள் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய, உடுதும்பர, ஹசலக, குண்டசாலை, மடவளை ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி…
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட புத்தளம் பிரதேச சபை வேட்பாளரை இரு சரீரப் பிணையில் விடுவிக்க புத்தளம் நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டது. 85 அதிகாரப்பூர்வ வாக்காளர் அட்டைகளை வைத்திருந்ததற்காக, குறித்த வேட்பாளர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ரத்மல்யாய பிரதேசத்திற்கு கடிதங்களை விநியோகிக்கும் தபால் ஊழியர்,…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக இடம்பெறவுள்ளது. நேற்றைய தினமும் , இன்றைய தினமும் வாக்களிக்க தவறியவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களிலும் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்கள், பொலிஸ், முப்படை,…