Category இலங்கை

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகள் நீக்கம்

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.  இதனூடாக, இறக்குமதி செய்யப்பட்டும்…

தேசபந்தின் உயிருக்கு ஆபத்தாம்

தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேசபந்து தென்னகோன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  இது தொடர்பான எழுத்து மூல கோரிக்கை நேற்றைய தினம் வியாழக்கிழமை பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  பதவி சார்ந்த கடமைகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உயிருக்கு பாதாள உலகக்…

ரணிலின் தலைமை பாதுகாப்பு அதிகாரி காங்கேசன்துறைக்கு

ரணிலின் தலைமை பாதுகாப்பு அதிகாரி காங்கேசன்துறைக்கு ஆதீரா Thursday, May 01, 2025 இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய, தலைமை பாதுகாப்பு அதிகாரி அசோக, காங்கேசன்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இவர்…

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான தொலைபேசிகள் பறிப்பு

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்க்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கு மற்றொரு வரப்பிரசாதம்  குறைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட நான்கு தொலைபேசிகளில் மூன்று தொலைபேசிகள் அகற்றப்பட்டுள்ளன.  அதன்படி, ஒரு முன்னாள் ஜனாதிபதி தற்போது ஒரு தொலைபேசியை மட்டுமே பயன்படுத்துவதாக தெரியவருகின்றது.  இந்த விடயம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி…

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு! 17,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இவ் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6 பேர்  உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, டெங்கு நோயால் மேல் மாகாணம் தொடர்ந்து அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு  46 சதவீதமானவர்கள் …

ஜனநாயக விழுமியங்களைப் பேணுமாறு ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ள TISL

ஜனநாயக விழுமியங்களைப் பேணுமாறு ஜனாதிபதியை, ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL)  வலியுறுத்துகிறது. ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தி குறிப்பிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  குறித்த செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,   தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கைகள் மற்றும் ஊடக வெளியீடுகளின் படி, தற்போதைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் தேர்தல் சட்ட மீறல்களில்…

33 வேட்பாளர்கள், 349 கட்சி ஆதரவாளர்கள் கைது!

ஆதீரா Wednesday, April 30, 2025 இலங்கை நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக 33 வேட்பாளர்களும், 349 கட்சி ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (30) காலை வரை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  அதேவேளை நேற்று வரை தேர்தல் தொடர்பான…

இந்திய அரசின் ஆயுஸ் புலமைப்பரிசில் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் கோரல் !

இந்திய அரசாங்கத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் ஆயுஸ் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இந்தியப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்காக இலங்கையர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆயுஸ் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் சித்த, ஆயுர்வேத, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் இளமானி, முதுமாணி மற்றும் கலாநிதி கற்கை நெறிகளைத் தொடர முடியும். ஒவ்வொரு கற்கை நெறிகளுக்குமான தகைமைகள் மற்றும்…

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். மேற்கு மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடைபெற்ற விருந்து ஒன்றின் போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் பாணந்துறை…

உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்

உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விடுவதே மிகச் சிறந்த பாதுகாப்பாகும் என்று முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அண்மைக்கால சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். உங்களில் யாருக்காவது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டால் கவனமாக இருந்து கொள்ளுங்கள். அண்மைக்காலங்களில் இறந்தவர்களில் பலர் தங்களுக்கு மரண அச்சுறுத்தல்…