Category இலங்கை

பிரதமருடனான சந்திப்பில் வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுமாறு வலியுறுத்துவேன் – கஜேந்திரகுமார்

பிரதமருக்கும், வட-கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (23) நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்துகொண்டு, வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுமாறு உறுதியாக வலியுறுத்தவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 திகதியிடப்பட்டு,…

40,000 ஆசிரியர் வெற்றிடங்கள்

நாடு முழுவதும் தற்போது 40 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் வெற்றிடங்களில் குறிப்பிட்டளவு தொகையையாவது ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.  எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.  இதன் போது கருத்துத் தெரிவித்த…

வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விபரங்களை வழங்குங்கள்

உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்த தகவல்களை உடனடியாக வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களை தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.  மேற்படி தகவல்கள் கிடைத்தவுடன், உறுப்பினர்களின் பெயர்களை உள்ளூராட்சி சபைகளின் விபரங்களுடன் வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.  இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில்…

ஐ.ம.சக்தி வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு – மூவர் கைது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களுத்துறை மாநகர சபைக்கு போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து களுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பந்துல பிரசன்ன என்ற நபரை இலக்கு வைத்து கடந்த 4 ஆம் திகதி பிற்பகல் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது. …

மகாவலி அதிகாரசபையின் பிரிவு முகாமையாளர் கைது

20,000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற மகாவெலி அதிகார சபையின் முகாமையாளர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.  வெலிகந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.  ரணவிரு அறக்கட்டளையின் கீழ் வீடு கட்டுவதற்காக முறைப்பாட்டாளருக்கு மகாவலி அதிகாரசபையின் மூலம் வழங்கப்பட்ட எத்துகல பகுதியில் உள்ள 20 பேர்ச்…

அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த வத்திக்கான் தூதுவர்!

இலங்கையின் வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் பிரயன் உடெய்க்வே, தனது பதவிக்காலம் முடிவடைந்து புறப்படுவதற்கு முன்பு வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெரத்தை சந்தித்துள்ளார்.  2020 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கான வத்திக்கான் தூதுவராகப் பணியாற்றி வரும் தூதுவர் பேராயர் பிரயன் உடெய்க்வே, இலங்கையில் இருந்த காலமானது மறக்க முடியாத நிகழ்வுகளால்…

இலங்கையில் உப்புப் பற்றாக்குறை: கப்பலில் வருகிறது 3,050 மெட்ரிக் டன்கள் உப்பு!

இலங்கையில் நிலவும் உப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கப்பல் இன்று செவ்வாய்க்கிழமை இரவு (மே 21) இலங்கையை வந்தடைய உள்ளதாக வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். இந்தக் கப்பலில் மொத்தம் 3,050 மெட்ரிக் டன் உப்பு உள்ளடங்குவதாக உறுதிப்படுத்தினார்.…

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். ரமித் ரம்புக்வெல்லவின் தந்தை, முன்னாள் அமைச்சர் தொடர்பான விசாரணையில் சந்தேக நபராக அவரைப் பெயரிட அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து நேற்று (மே 20) நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, வாக்குமூலம் அளிக்க இன்று…

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியுடன் இரு பெண்கள் கைது

ஆதீரா Wednesday, May 21, 2025 இலங்கை ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சந்தேக நபர்கள் பத்தரமுல்லை மற்றும் கொழும்பு 06 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 40 மற்றும் 68…

அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களை சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ்த் தேசியப் பேரவையினர் அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை (20) அந்தந்த தூதரங்களில் சந்திப்பு இடம்பெற்றது. இந்த தூதுவர்களுடனான சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்   கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ…