Category அம்பாறை

இனவழிப்பிற்கு நீதி கோரி வடகிழக்கில் போராட்டம்!

நீண்டகாலமாக  தமிழ் மக்கள் மீது  திட்;டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது  வடக்குகிழக்கு  சமூகஇயக்கத்தின் ஏற்பாட்டில்  வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் எதிர்வரும்  26ம் திகதி சனிக்கிழமை  நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு காந்தி பூங்கா, அம்பாறை திருக்கோயில், திருகோணமலை சிவன் கோயிலடி , முல்லைத்தீவில் மாவட்ட செயலகம், கிளிநொச்சி  கந்தசாமி கோயில், மன்னார்…

இரத்தான வர்த்தமானி எங்கே?

வடகிழக்கில் தமிழ் மக்களது காணிகளை சுவீகரிக்கும் இலங்கை அரசின் சதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கவென கடந்த மார்ச் 28ம் திகதிய  வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தாக்கல் செய்த மனு இன்று வெள்ளிக்கிழமை (27) விசாரிக்கப்பட்ட பின்னர்…

அம்பாறையில் பொிய முதலையைப் பிடித்த மக்கள்

அம்பாறையிலுள்ள பிரதேசத்திற்குள் 8 அடி நீளமுடைய இராட்சத முதலை ஒன்று இன்று காலை  (27) புகுந்துள்ளது.  அம்பாறை –  பாலமுனை பகுதியிலுள்ள பிரதேசத்திற்குள் திடீரென முதலை ஒன்று புகுந்து அச்சுறுத்தியுள்ளது. இதனால் அந்தப்பகுதியிலிருந்த பெரியோர், சிறியோர், குழந்தைகள் என அனைவரும் அச்சத்திற்குள்ளாகினர்.  அதனையடுத்து பிரதேசவாசிகள் இணைந்து குறித்த முதலையைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்தனர். முதலை சுமார்…

புத்தர் வந்தது உண்மையே!

உகந்தை மலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டிருக்கவில்லையென அம்பாறை மாவட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் கருத்து வெளியிட்டுள்ள நிலையில்  புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதை தாயக செயலணி சிவில் சமூக அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் செல்வக்குமார் உறுதிப்படுத்தியுள்ளார். உகந்தை மலை சுற்றுச் சூழலில் கடற்கரையோரம் உள்ள மலையொன்றில் புதிதாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் எழுந்துள்ள…

உகந்தை முருகன் ஆலயப் பகுதியில் நிறுவப்பட்ட புத்தர் சிலை

அம்பாறை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலாளர் பிரிவின் தெற்கு எல்லையில், தமிழர்களின் புராதன வரலாறு மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட உகந்தை முருகன் ஆலயப் புனிதப் பிரதேசத்தில், அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மலையில் கடற்படையினரால் திடீரென நிறுவப்பட்ட புத்தர் சிலை தொடர்பாக பல்வேறு எதிர்மறையான கருத்துகள் மற்றும் தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியுள்ளன.  இந்த புத்தர்…