Category அமெரிக்கா

தவறுதலாக வாடிக்கையாளர் கணக்கில் $81 டிரில்லியனை வரவு வைத்து வங்கி!!

அமெரிக்காவில் சிட்டி குரூப் (Citigroup ) வங்கி வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் 280 டொலர்கள் வரவு வைப்பதற்குப் பதிலாக 81 டிரில்லியன் டொலர்கள் பணத்தை வரவு வைத்தது. இந்த பணப் பரிமாற்றம் சில மணி நேரங்களில் மீட்டு எடுக்கப்பட்டதாக பைனான்சியல் டைம்ஸ்  செய்தி வெளியிட்டுள்ளது. பணம் செலுத்தப்பட்ட ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு மூன்றாவது வங்கி ஊழியர்…

அமெரிக்க தனியார் விண்கலம் நிலவில் தரையிறங்கியது

அமெரிக்காவின் ஒரு ஆளில்லா விண்கலம் முதன் முறையாக இன்று ஞாயிற்றுக்கிழமை சந்திரனில் தரையிறங்கியது. ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் சந்திர லேண்டர் ப்ளூ கோஸ்ட், சந்திரனின் பூமியை எதிர்கொள்ளும் பக்கத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள ஒரு பெரிய படுகையான மேர் கிரிசியத்தில் உள்ள ஒரு பழங்கால எரிமலை துவாரத்தின் அருகே தரையிறங்கியது. நாங்கள் சந்திரனில் இருக்கிறோம் என்று மிஷன்…

அமெரிக்காவில் 350 மொழிகள் பேசப்படுகிறது: தேசிய மொழியாகவுள்ளது ஆங்கிலம்

அமெரிக்காவில் ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழியாக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார். அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை மாற்றும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். அது எப்போது கையெழுத்தாகும் என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆங்கிலத்தை தேசிய மொழியாக நியமிப்பது ஒற்றுமையை ஊக்குவிக்கிறது. அரசாங்க நடவடிக்கைகளில் செயல்திறனை…

மோதலில் முடிவடைந்தது டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி சந்திப்பு

அமெரிக்கா சென்ற உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபி டொனால்ட் டிரம்பைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்காவுடன் ஒரு முக்கியமான கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நடைபெறவில்லை.  அவர்களின் கலந்துரையாடல் ஒரு சண்டையில் முடிவதற்கு முன்னர் ரஷ்யாவுடனான ஒரு போர் நிறுத்தத்தில்…

நடிகர் ஜீன் ஹேக்மேன் மற்றும் அவரது மனைவி வீட்டில் இறந்து கிடந்தனர்

தனது வாழ்க்கையில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற 95 வயதுடைய அமெரிக்க நடிகர் ஜீன் ஹேக்மேன் நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் தனது 63 வயது மனைவி பெட்சி அரகாவாவுடன் அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். சாண்டா ஃபே கவுண்டி ஷெரிப் அலுவலகம் இறப்புகளை உறுதிப்படுத்தியது. மேலும் இதில்…

அமெரிக்காவும் கடை திறந்தது!

அமெரிக்காவும் கடை திறந்தது! தூயவன் Wednesday, February 26, 2025 அமெரிக்கா இலங்கையில் மற்றுமொரு புதிய எரிபொருள் நிறுவனமான RM Parks (தனியார்) நிறுவனம் திறக்கப்பட்டுள்ளது.  இலங்கை முழுவதும் உள்ள 150 சில்லறை எரிபொருள் நிலையங்களின் வலையமைப்பை ஷெல் என மறுபெயரிட்டுள்ளது. இது இலங்கை பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தால் 2023 ஆம் ஆண்டு முதல்…

5 மில்லியன் முதலீடு செய்யதால் நீங்களும் அமெரிக்க குடியுரிமை பெறலாம்: டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும் நபருக்கு அமெரிக்க குடியிருமையை வழங்கும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று செவ்வாயன்று முன்வைத்தார். இது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான விசா திட்டத்தின் கீழ் வருகிறது. அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான ஒரு வழியாக, 5 மில்லியன் டொலர்களுக்கு வாங்கக்கூடிய தங்க அட்டை (Gold Crad) என்று…

ஜெலென்ஸ்கி ஒரு சர்வாதிகாரி – டிரம்ப்

உக்ரைன் தொடர்பான அமெரிக்க ரஷ்யா பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர்உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை “சர்வாதிகாரி” என்று டொனால்ட் டிரம்ப் அழைத்தார். இது பதட்டங்களை அதிகரித்தது. உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை “சர்வாதிகாரி” என்று டிரம்ப் முத்திரை குத்தியதைத் தொடர்ந்து, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான விமர்சனப் பரிமாற்றம் புதன்கிழமை மேலும் அதிகரித்தது.  நான்…

அமெரிக்காவில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலி!

அமெரிக்காவின் சில பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தென்கிழக்கு மாநிலமான கென்டக்கியில் மட்டும் 7 வயது குழந்தை உட்பட எட்டு பேர் இறந்தனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், என்று மாநில ஆளுநர் ஆண்டி பெஷியர்…