Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பொது அமைப்புகளின் கலந்துரையாடல் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது. எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான நினைவேந்தலும், அதற்கு நீதி கோரிய போராட்டமும் முன்னெடுப்பதற்காக குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அதன் போது, எட்டு மாவட்டங்களிலும்…
பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சூழ கடுமையான இராணுவ கண்காணிப்பின் கீழ் உள்ளதாகவும் , நேர மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையால் , ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று வழிபட முடியவில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர் அதேவேளை கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கி இன்னமும் உத்தியோகபூர்வ கடிதம் வழங்கப்படாமையால் , எந்நேரமும் ஆலயத்திற்கு செல்வதனை இராணுவத்தினர் தடை…
வடமராட்சி கிழக்கு பெருந்தொகை கஞ்சா மீட்பு யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது இரகசிய தகவலை அடுத்து, நெல்லியடி விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் பொதிகள் 40 அடங்கிய 81 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், மேலதிக…
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் அப்பிரதேச தவிசாளர்களை தேசிய மக்கள் சக்தியினர் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். கடந்த மாதம் , மறுமலர்ச்சிக்கான பாதை திட்டத்தின் கீழ், காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி வீதி புனரமைப்பு பணியின் ஆரம்ப நிகழ்வில் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வேளை அவ்விடத்திற்கு தவிசாளர் வருகை தந்த போதிலும், நிகழ்வினை…
பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. சம உரிமை இயக்கம் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இன்னொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய், காணாமல் ஆக்கப்பட்ட…
தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் கச்சதீவு விவகாரம் காய்ச்சலாக மாறுவது வழமையான விடயம் என தெரிவித்த யாழ் மாவட்ட மீனவ அமைப்பின் பிரதிநிதி செல்லத்துரை நற்குணம், அதற்காக எமது மீனவ மக்கள் பதட்டம் அடைய மாட்டார்கள் என தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு…
வல்லைப்பாலம் பழுதடைந்து பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கின்றது. எனவே, இதற்கு என்ன தீர்வு? என வலிகாமம் கிழக்கு பிரதேசசபைத் தவிசாளர் தியாகராசா நிரோஷ் யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். வலிகாமம் கிழக்கின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் வல்லைப் பாலம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. ஆறுக்கும் மேற்பட்ட உயிர்கள் அண்மைக்காலத்தில் பறிபோயுள்ளன.…
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோதமான விகாரைக்கு எதிராக வலி. வடக்கு பிரதேச சபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் இலவசமாக வழக்காடுவார் என வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சபையில் உறுதி அளித்துள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்…
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு கடற்தொழில் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலர்ஆகியோர் நேற்றைய தினம் இரகசிய விஜயம் மேற்கொண்ட நிலையில் , அங்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையிலான குழு சென்ற நிலையில் அது பரகசியம் ஆகியுள்ளது. தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரை தொடர்பிலான பிரச்சனை தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக , கடற்தொழில்…
சட்டவிரோத தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் மேலுமொரு சட்ட விரோத கட்டடம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் , அது தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபையினரால் விகாரதிபதியிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார். வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. அதன் போது சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள…