Category யாழ்ப்பாணம்

சூரியசக்தி கட்டமைப்பை நிறுத்தி வைக்குமாறு மின்சார சபை கோரிக்கை

மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்காக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நாளாந்தம் பிற்பகல் 3 மணி வரை கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரியசக்தி கட்டமைப்பை நிறுத்தி வைக்குமாறு மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாடளாவிய ரீதியில் வீட்டுக்கூரையில் பொருத்தப்பட்டுள்ள சூரியசக்தி…

புத்தாண்டு விடுமுறைக்கு யாழ் வந்த மகளை அழைக்க சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழப்பு

பேரதெனியா பல்கலைக்கழத்தில் கல்வி கற்கும் மகள் புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்த வேளை அவரை அழைக்க சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.  புன்னாலைக் கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகாமையில் நேற்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில்  பலாலி கிழக்கு, பலாலியைச் சேர்ந்த கந்தவனம் செல்வநாயகம் (வயது- 62) என்பவர் உயிரிழந்துள்ளார்.    பேரதெனியா…

யாழில். எறும்பு கடிக்கு இலக்கான 22 நாளான சிசு உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் எறும்பு கடிக்கு இலக்கான பிறந்து இருபத்தியொரு நாளேயான பெண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது. ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22 ஆம் திகதி பெண் சிசு பிறந்துள்ளது.  குறித்த சிசுவிற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் எறும்பு கடித்த நிலையில் அதனை பெற்றோர் கவனிக்காமல் விட்டதன் காரணமாக  நேற்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை…

தாங்கள் சந்தர்ப்பவாதிகள் அல்லவாம்

நாங்கள் சந்தர்ப்பவாதிகள் இல்லை. எந்த வித பேதங்களும் இல்லாத ஒரு தாய் பிள்ளைகளே என வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் யாழ்ப்பாணத்தில் தமிழில் உரையாற்றினார். யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்திருந்த அமைச்சர் விஜித ஹேரத் வர்த்தகர்களுடனான சந்திப்பிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் நேற்று கலந்து கொண்டிருந்தார். இதன் போது தனக்கும் கொஞ்சம் கொஞ்சம் தமிழ்…

மண்டைதீவு வேண்டாம்:வலுக்கும் குரல்கள்!

மண்டைதீவு மைதானத்தை வேண்டாம் என்று சொல்லுங்கள்! நமது ஈரநிலங்களைப் பாதுகாக்கவும் குரல்கள் எழுந்துள்ளன. யாழ்ப்பாணத்தின் மண்டைதீவில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை கட்ட இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது – இது 80க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், சதுப்புநில காடுகள் மற்றும் வளமான கடல் பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்ட ராம்சர் வகை ஈரநிலப் பகுதியாகும். மண்டைதீவின் சதுப்புநிலங்கள் தோராயமாக…

ஈபிடிபியிலும் போலி பிரிவாம்?

ஈபிடிபியிலும் போலி பிரிவாம்?  வலி கிழக்கு பிதேச சபையில் போட்டியிடுகின்ற சுயேட்சைக் குழு ஒன்று, தம்மை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்றும் தந்திரோபாய காரணங்களுக்காக சுயேட்சை அணியாக போட்டியிடுவதாகவும் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக ஈபிடிபி குற்றஞ்சுமத்தியுள்ளது. இவ்வாறான பிரசாரங்கள் தொடர்பாக  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போலிகளை கண்டு ஏமாறாமல்,தமது சி்ன்னமான வீணைச் சின்னத்திற்கு…

ஆலய நெறிமுறைகளை மீறிய பிரதமரின் பாதுகாப்பு பிரிவினர்

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு பிரதமரின் பாதுகாப்புக்காக சென்ற பாதுகாப்பு பிரிவினர் , ஆலய வளாகத்தினுள் சப்பாத்துக்களுடன் நடமாடியமைக்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.  மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது. அதன் போது ஆலய வழிபாட்டிற்காக பிரதமர் ஹரிணி அமரசூரியர் ஆலயத்திற்கு சென்று இருந்தார்.  அதன்…

பிரதமர் இந்து மக்களின் உணர்வுகளை கீறி காயப்படுத்தியுள்ளார்

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரதமர் இந்து மக்களின் உணர்வுகளை கீறி காயப்படுத்தியுள்ளார். அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,  எதிர்வரும் 06ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.…

அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி துஸ்பிரயோகம் செய்கின்றது

தேர்தல் சட்ட விதிகளுக்கும் எமது மக்களின் சமய விழுமியங்களுக்கும் மதிப்பளிக்காது, அரசாங்கம் என்ற அதிகாரப் போக்கில் தேசிய மக்கள் சக்தி செயற்படுகின்றது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ்   குற்றஞ்சாட்டினார். நீர்வேலியில் பிரதமர் கலந்துகொண்ட பிரச்சார மேடையில் தன் தொடர்பில் பெயர் குறிப்பிட்டு நீண்டதாக அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கையிலேயே…

புன்னாலைக்கட்டுவானில் மோட்டார் சைக்கிள் விபத்து – முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டியான முதியவர் உயிரிழந்துள்ளார்  புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த கந்தவர்ணம் செல்வநாயகம் (வயது 62)  எனும் முதியவரே உயிரிழந்துள்ளார்  யாழ்ப்பாணம் நோக்கி பலாலி வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகில் ,…