Category யாழ்ப்பாணம்

ஜே.வி.பியின் உண்மையான தோற்றம் வெளி தெரிகிறது

அனைவரும் சமம் என கூறும் அனுர தரப்பினர் அவர்களுக்குள் மறைந்திருக்கும் JVP என்ற தோற்றத்தின்  உண்மையான இயல்பை தற்போது காட்ட தொடங்கியுள்ளனர் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக…

செம்மணி மனிதப் புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் காட்டும் அநுர அரசு

யுத்த காலத்தில் போர் நிறுத்தத்தை விரும்பாத  அப்போதைய ஜேவிபி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை மூழ்கடிக்கும் முயற்சியே செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வை மேற்கொள்வதில் தயக்கம் காட்டுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார்.  அது…

திருகோணமலையில் யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – இளைஞன் உயிரிழப்பு

யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் திருகோணமலை -ஹொரவபொத்தானை பிரதான வீதி, கன்னியா பகுதியில் புத்தாண்டு தினமான நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம் பெற்றுள்ளது.  குறித்த விபத்தில் வவுனியா பட்டாணி புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த  28 வயது இளைஞன் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன் அவரது…

யாழில். வீதியோரமாக நண்பருடன் உரையாடிக்கொண்டிருந்தவருக்கு எமனான மோட்டார் சைக்கிள்

யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக நின்று நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தவரை வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  வல்வெட்டித்துறை ஆதி கோவிலடியை சேர்ந்த இரத்தினவடிவேல் இரவீந்திரன் (வயது 65) என்பவரே உயிரிழந்துள்ளார்  கடந்த 11ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் துவிச்சக்கர வண்டியை வீதியோரமாக நிறுத்தி நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வேளை மிக…

யாழில். புத்தாண்டில் கள் இறக்க தென்னையில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

யாழில். புத்தாண்டில் கள் இறக்க தென்னையில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு ஆதீரா Tuesday, April 15, 2025 யாழ்ப்பாணம் புத்தாண்டு தினத்தில் கள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.  கல்வியங்காட்டை சேர்ந்த சின்னத்துரை ரவி (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார்  தென்னை மரத்தில் ஏறிய போது, தென்னையில் கட்டப்பட்டிருந்த பொச்சு…

தமிழ் மக்கள் தமிழரசு பக்கமாம்:சுமா!

தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  இலங்கை தமிழரசுக் கட்சியின் வடமராட்சிக்கிளை அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் “யாழ்ப்பாணத் தமிழர்களின் ஆதரவு கூட தமிழ்க் கட்சிகளுக்கு கிடையாது. தேசிய மக்கள் சக்திக்கு தான் அந்த ஆணை கொடுக்கப்பட்டிருக்கிறது என அராசாங்கம்…

டக்ளஸ் கைது?

யாழில் மகேஸ்வரி நிதியத்தின் ஊழல் தொடர்பில் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பிலான விசாரணைகளை அடுத்து யாழில் ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைதாவதற்கு வாய்ப்புள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிழக்கில் முன்னாள் அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதாகி மூன்று மாதங்களிற்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனினும் பிள்ளையான்…

யாழில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைதாவர் – புத்தாண்டில் சுமந்திரன் ஆரூடம்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வடமராட்சிக் கிளை அலுவலகத்தில் பொங்கலும் கைவிசேடம் வழங்கும் நிகழ்வும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தலைமையில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. யாழில் மகேஸ்வரி நிதியத்தின் ஊழல் தொடர்பில் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பிலான விசாரணைகளை அடுத்து யாழில் ஒரு…

புத்தாண்டில் நல்லூரானுக்கு சிறப்பு பூஜை

புத்தாண்டில் நல்லூரானுக்கு சிறப்பு பூஜை மலர்ந்துள்ள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு , வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.  காலை ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து காலை 6.45 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , காலை 07 மணிக்கு வேல் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய்…

வடக்கிற்கு ஆப்பு:மின்சாரம் வேண்டாமாம்!

இலங்கையின் வடபுலத்திலிருந்து சோலார் மூலமான மீள்புதுப்பிக்கதக்க மின் உற்பத்தியை கட்டுப்படுத்த அனுர அரசு திட்டமிட்டுள்ளது. அவ்வகையில் வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கல சக்தியை பயன்படுத்துவோர் இன்று  13ஆம் திகதி தொடக்கம்  ஏப்ரல் 21ஆம் திகதி வரை நாளாந்தம் பகல் வேளைகளில்; முற்பகல் 10மணி முதல் பிற்பகல் 3.00 மணிவரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து சூரிய…