Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இலங்கை படைகளால் திருமலையின் அரங்கேற்றப்பட்ட சம்பூர் மனிதப் புதைகுழி 35 வருடங்களின் பின்னராக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, சம்பூர் கடற்கரை ஓரமாக நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மனித எச்சங்கள் வெளிவந்தததையடுத்து, கண்ணிவெடி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப்பணிகள் இன்றையதினம் மீள ஆரம்பமாகியுள்ளது. இன்றைய…
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை 07 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. …
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி ஒற்றை திருக்கை மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து…
தமது இயலாமையை மூடி மறைப்பதற்காகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்; நாட்டின் தற்போதைய அரசியல் நிலை பற்றிக் கதைப்பதற்கு ஒன்றுமில்லை. மக்களின் பிரச்சினைகள் மூடி மறைக்கப்படுகின்றன. பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே அரசாங்கம் முன்னெடுக்கின்றது. மறுபுறத்தில்…
யாழில். பாழடைந்த வீட்டில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு ஆதீரா Monday, July 21, 2025 யாழ்ப்பாணம் உயிர்கொல்லி போதைப்பொருளை அடிமையான இளைஞன் ஒருவர் பாழடைந்த வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். நகர் பகுதியை அண்மித்த பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞனே , சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை…
யாழ்ப்பாணத்தில் கால் பந்து விளையாடிக்கொண்டிருந்த போது , இளைஞன் மீது கோல் கம்பம் சரிந்து விழுந்ததில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியை சேர்ந்த யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை (வயது 29) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். நாவாந்துறை சென் மேரிஸ் வியைாட்டுக்கழக மைதானத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சக வீரர்களுடன் கால் பந்து…
கசூரினா கடற்கரையில் தீ ஆதீரா Monday, July 21, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றான கசூரினா கடற்கரையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அறிந்து கடற்கரைக்கு விரைந்த பிரதேச சபையினர் , கடற்படையினர் ஆகியோர் நீண்ட போராட்டத்தின் பின் தீயினை கட்டுக்குள்…
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. அதன் பிரகாரம் வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவராக யோகராசா கனகரஞ்சினியும் செயலாளராக சிவானந்தன்…
வட்டுக்கோட்டையில் குழு மோதல்:இருவர் கைது! தூயவன் Sunday, July 20, 2025 யாழ்ப்பாணம் யாழ். வட்டுக்கோட்டை மூளாயில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் மூண்டுள்ளது.கலவரத்தையடுத்து இலங்கை காவல்துறை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளது. கலவரத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் மற்றொரு மோட்டார் சைக்கிள் அடித்து உடைக்கப்பட்டுமுள்ளது. மோதலின் தொடர்ச்சியாக இருவர் கைது…
யாழ்ப்பாணத்தில் இரு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் . பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வன்முறையை கட்டுப்படுத்தியுடன் , வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரை கைது செய்துள்ளனர். குறித்த வன்முறை சம்பவத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளதுடன் , மேலுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டு , சேதமாக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில்…