Category யாழ்ப்பாணம்

பிரதமர் ஹரிணிக்கு தேர்தல் ஆணைக்குழு பயம்!

சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு கோயில் வளாகத்தைப் பயன்படுத்தியது குறித்து விசாரணை நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எனினும்  முறைப்பாடு அளித்திருந்தாலும் தேர்தல் ஆணைக்குழு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கோயில்…

படுகொலையான ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழில் போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், அவர்களின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் , தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சுடரேற்றி, மலர் மாலை அணிவித்து…

வடக்கு – கிழக்கில் 2ஆம் திகதி வரையில் மழை தொடரும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 02ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.  அது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தற்போது கிடைத்து வரும் மழை மேற்காவுகைச் செயற்பாட்டினால் உருவாகும் மழையாகும். அதனால் நண்பகல் வரை கடுமையான வெப்பநிலையுடன்…

யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு!

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது மாணவ ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் பலகலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விதிகளை மீறி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கமைவாக நடந்து கொள்வதாகவும், இந்த விதி மீறல்கள் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வதாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.  கடந்த…

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களில் பலர் சட்டவிரோதிகள்

இன்று தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பலர் நீதிமன்றத்தின் பிணையில் நிற்பவர்களே. களவுகள் செய்து நீதவான் நீதிமன்ற பிணையில் இருப்பவர்கள் தற்போது வேட்பாளராக நிற்கிறார்கள்.இவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதி எங்களுக்கு பிரசங்கம் செய்கிறார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல்…

கே.கே.எஸ். வீதி ஏ.கே.டி.வீதியாக மாறும் அபாயம்

கே.கே.எஸ். வீதியை ஏ.கே.டி.வீதி என மாற்றினால் கூட யாரும் எதுவும் செய்ய முடியாது. அவ்வாறு மாற்றினால் அந்தக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் பாராளுமன்றத்தில் கூட குரல் எழுப்ப முடியாது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு…

யாழில். நிலவும் அதீத வெப்பம் – ஒருவர் உயிரிழப்பு

யாழில். நிலவும் அதீத வெப்பம் – ஒருவர் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இணுவிலை சேர்ந்த ஆறுமுகம் யோகராசா (வயது 75) என்பவரே உயிரிழந்துள்ளார்  இணுவில் பகுதியில் வீதியோரமாக உள்ள தோட்டக்காணி ஒன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதியவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.  அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை…

யாழில். காய்ச்சலால் ஒருவர் உயிரிழப்பு

யாழில். காய்ச்சலால் ஒருவர் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த கமலநாதன் ராஜபத்மினி (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார்.  கடந்த 26ஆம் திகதி கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார் 

யாழில் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றத்தில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவரை கடந்த இரண்டு வருட காலத்திற்கு மேலாக வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு யுவதிகள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை அயல் வீட்டு பெண்ணொருவரும் மற்றுமொரு பெண்ணொருவரும் இணைந்து சிறுமியை மிரட்டி பிற ஆண்களுடன் உறவு கொள்ள வைத்து , பணம்…

பலாலி வீதி திறப்பு – காங்கேசன்துறை வரையில் சேவையில் ஈடுபடவுள்ள மினிபஸ்கள்

பலாலி வீதி திறப்பு – காங்கேசன்துறை வரையில் சேவையில் ஈடுபடவுள்ள மினிபஸ்கள் எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து 764 வழித்தட சிற்றூர்திகள் (மினிபஸ்கள்) யாழ்ப்பாணத்திலிருந்து பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையில் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 769 வழித்தட சிற்றூர்திகளும்,  யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வீதியூடாக காங்கேசன்துறை வரையில் சேவையில் ஈடுபடும். கடந்த 10ஆம் திகதியன்று பலாலி…