Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ். பல்கலையில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ் பல்கலை கழக வளாகத்தில் மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்றன என்ற உண்மையையும் அநீதிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்ற கடப்பாட்டினையும் மூடி மறைக்கும் செயலாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடிப்படையான ஜே.வி.பியின் உத்தியோகபூர்வ இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் சங்கம் சகோதரத்துவ நாளாக கறுப்பு யூலை நிகழ்வுகளை மடைமாற்றம் செய்ய எத்தனிக்கின்றது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்…
அம்பாறையில் இளம் பெண்ணொருவர் இன்று அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு பிரவேசித்த இளைஞன், இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும் வெட்டுக்காயங்களை ஏற்படுத்திய பின்னர் , இளம் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.…
வடக்கு , உள்ளூராட்சி சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி மின் விளக்குகளை பழுது பார்த்தல் மற்றும் புதிதாக பொருத்துதல் தொடர்பில் முதல் கட்டமாக 38 பேருக்கு பயற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை…
யாழ்ப்பாண அண்மித்த பகுதியில் இந்திய துணைத்தூதரகத்திற்கு சொந்தமான சொகுசு வாகனம் விபத்துக்குள்ளாகி கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. வாகனம் விபத்துக்குள்ளான வேளை வாகனத்தில் சாரதி மாத்திரமே பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ் . நகர் பகுதியில் இருந்து பலாலி வீதியூடாக பயணித்த இந்திய துணை தூதரகத்திற்கு சொந்தமான வாகனத்துடன் , நல்லூர் – ஓட்டுமட…
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் 17ஆவது நாளாக தொடரும் நிலையில் ஆறு மாதங்களேயான வயதுடைய குழந்தையினது உடல என்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்றைய அகழ்வில் மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.இன்று அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் அவதானிப்பின் அடிப்படையில் கைக்குழந்தைகள் உட்பட அனைத்தும் சிறு பிள்ளைகளின் எலும்புக்கூடுகளேயென மருத்துவ அதிகாரி தகவல்…
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நடப்படவுள்ள விடுதலை விருச்சத்திற்கான நீர் சேகரிக்கும் வாகன பவனி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை வலியுறுத்தும் வகையிலான அணி திரள் நிகழ்வு நாளை மறுதினம் வியாழக்கிழமை, மறுநாள் வெள்ளிக்கிழமை ஆகிய…
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிறு குழந்தையினுடையது என சந்தேகிக்கப்படும் எலும்பு கூட்டு தொகுதி உட்பட 08 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , ஒரு பால் போச்சியை ஒத்த போத்தல் ஒன்றும் (குழந்தைகள் பால் அருந்தும் போத்தல்) ஆடைகளை ஒத்த துணிகள்…
யாழ்ப்பாணத்தில் ‘நட்புறவுப் பாலம்’ என்ற பெயரில் அநுரகுமார திசாநாயக்கவின் அரசு ஒரு பாரிய சதித்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அன்றைய தினம் கறுப்புக் கொடி கட்டி தமிழ் மக்கள் தங்கள் எதிர்ப்பையும் துக்கத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். …
ஆக்கிரமிக்கப்பட்ட காணியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும் , தவறின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தையிட்டி விகாரையின் விகாரதிபதிக்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார். தையிட்டியில் உள்ள தனது காணியில் அடாத்தாக சட்டவிரோத கட்டடம் ஒன்றினை அமைத்து வருவதாக எமக்கு ஒருவர் முறைப்பாடு அளித்துள்ளார். எனவே முறைப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ள காணியில்…