Category யாழ்ப்பாணம்

பலாலி இராணுவ முகாமில் ஒருவர் உயிரிழப்பு

பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த சிவில் பாதுகாப்பு பிரிவு  உத்தியோகத்தர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.  கண்டி – முறுத்தலை பகுதியைச் சேர்ந்த விதுர சஞ்சீவ மதுரட்ட (வயது 51) என்பவரே உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த நிலையில் அவருக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.  அதனை அடுத்து…

வல்வையில் இடம்பெற்ற இந்திர விழா

வல்வையில் இடம்பெற்ற இந்திர விழா ஆதீரா Tuesday, May 13, 2025 யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்த திருவிழா சித்திரா பௌர்ணமி தினமான நேற்றைய தினம்  இடம்பெற்றது.  அதனை முன்னிட்டு வல்வை மக்களால் இந்திர விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஆலயத்தை சூழவுள்ள சுமார் 3 கிலோமீற்றர் தூர வீதி…

யாழில் சக பொலிஸ் உத்தியோகஸ்தரை வெளிநாடு அனுப்புவதாக மோசடியில் ஈடுபட்டவர் கைது

யாழ்ப்பாணத்தில் சக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக பெருமளவான பணத்தினை பெற்று மோசடி செய்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கடந்த 2022ஆம் ஆண்டு, சக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 14 இலட்சத்து…

யாழில். ஊசி மூலம் போதைவஸ்து நுகர்ந்தவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒருவார கால பகுதியில் அதீத போதை வஸ்து பாவனை காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர்.  சாவகச்சேரி , மட்டுவில் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 27 வயதுடைய இளைஞன் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்ட நிலையில் அவரை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சமயம் , அவர்…

யாழில். தென்னாடு சஞ்சிகையின் 57 ஆவது இதழ் வெளியீடு

யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கில் அமைந்துள்ள தென்னாடு செந்தமிழ் ஆகம சிவ மடத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை பூரணை தினத்தினை முன்னிட்டு, நான்கு  நிகழ்வுகள் ஒரு சேர இடம்பெற்றன  பரிபூரணமடைந்த நல்லை ஆதீன முதல்வருக்கான பிரார்த்தனை , அண்மையில் ஓய்வு பெற்ற வடமாகாண பிரதம செயலாளர் இ. இளங்கோவனுக்கு மதிப்பளித்தல் , அண்மையில் வெளிவந்த உயர்தர பரீட்சை…

யாழில் சுற்றுலா பேருந்தின் மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேருந்து மீது இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். வேலணை பகுதியில் இருந்து யாழ்ப்பாண நகர் நோக்கி வந்த பேருந்து, மோட்டார் சைக்கிளில் ஒன்றினை முந்தி செல்ல முற்பட்ட போது, இடம் தரவில்லை என, மோட்டார் சைக்கிளில் வந்த…

தையிட்டியில் கஞ்சி:வவுனியாவில் பன்சல!

இலங்கை முழுவதும் வெசாக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் தமிழ் மக்களால் தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரை முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் மற்றும் செயலாளரான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கஞ்சி வார்ப்பில் கலந்து கொண்டிருந்தனர். அதேவேளை, சட்டவிரோத மக்களது காணிகளை சுவீகரித்து…

முதல்மாவீரர் சங்கரின் தந்தை பிரிந்தார்!

ஈழப்போராட்டத்தில் வீரமரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் மாவீரரான சங்கரின் தந்தையார் இயற்கை எய்தியுள்ளார். வடமராட்சி கம்பர்மலையைச் சேர்ந்த புகழ்பூத்த கல்வியாளர் , ஓய்வு பெற்ற ஆசிரியருமான செல்வச்சந்நிரன் அவர்கள் இன்று இறைபதமடைந்துள்ளார். விடுதலைப்போராட்டத்தின் முதல் மாவீரர் செல்வச்சந்திரன் சத்தியநாதன் இயக்கப்பெயர்: சங்கர் ஜுன் 19, 1960ம் ஆண்டில் பிறந்திருந்தார்.1982ம் ஆண்டின் நவம்பர் 27, வீரச்சாவடைந்த…

தையிட்டியிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி

யாழ்ப்பாணம் – தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.  தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்ற கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  போராட்ட களத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு , போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.  குறித்த போராட்டத்தில் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்…

வல்வெட்டித்துறையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய யாழ்.பல்கலை மாணவர்கள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்திற்கு அருகில் உள்ள ஆலடி பகுதியில் இன்றைய தினம் கஞ்சி வழங்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்களால் அப்பகுதி மக்களிடம் அரிசி சேகரிக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு சிரட்டைகளில் பொதுமக்களுக்கும் வீதியில் சென்றவர்களுக்கும் வழங்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை…