Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்றன. பிரதேச சபை முன்றலில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை கறுப்பு யூலை இன அழிப்பில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை கொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளையும் நினைந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து…
இலங்கை சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியற் கைதிகளுக்கு நீதி வேண்டிய நினைவேந்தலும், நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது விடுதலையை நோக்கிய “விடுதலை” எனும் தொனிப்பொருளிலான கவனயீர்ப்பின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கிட்டுப் பூங்காவில் நடைபெற்றது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வுகளில் சிறைப்படுகொலை…
நீண்டகாலமாக தமிழ் மக்கள் மீது திட்;டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது வடக்குகிழக்கு சமூகஇயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் எதிர்வரும் 26ம் திகதி சனிக்கிழமை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு காந்தி பூங்கா, அம்பாறை திருக்கோயில், திருகோணமலை சிவன் கோயிலடி , முல்லைத்தீவில் மாவட்ட செயலகம், கிளிநொச்சி கந்தசாமி கோயில், மன்னார்…
செம்மணி மனிதப்புதைகுழியில் இன்று வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.அதனையடுத்து இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மொத்த மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. அவற்றில் 81 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தடயவியல் அகழ்வாய்வுத்தளம் -2 இல் எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டது. எனினும் அவ்வெலும்புக்கூட்டினில் சட்ட ரீதியிலான பிரேத பரிசோதனை…
செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட சிறு குழந்தையின் எலும்பு கூட்டு தொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த எலும்பு கூட்டு தொகுதியுடன் அடையாளம் காணப்பட்ட பால் போச்சியும் அகழ்ந்து எடுக்கப்பட்டு , சான்று பொருளாக அடையாளப்படுத்தப்பட்டு, நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல்…
அரசியல் கைதிகளின் விடுதலையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் கலொக் கணநாதன் உஷாந்தனால் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது. அந்த பிரேரணையானது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. தனது பிரேரணை தொடர்பாக உறுப்பினர் சபையில் கருத்து தெரிவிக்கையில், மிக மோசமான துன்பியல்கள் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கறுப்பு ஜூலையை நினைவேந்தி வருகின்றோம். இவ்…
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 02 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 05 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 05 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 25மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 16…
யாழ்ப்பாணத்தில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மண்டைதீவு பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தாவடி பகுதியில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் , சுதுமலை பகுதியை சேர்ந்த நேசராஜன் சர்வேந்திரன்…
கனடாவில் இருந்து விடுமுறையை கழிக்க யாழ்ப்பாணம் வந்தவர் அவரது வீட்டில் இருந்து நேற்றைய தினம் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருநகர் பகுதியி சேர்ந்த பி. மரியதாசன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்தவர், குடும்பத்துடன் கனடாவில் வசித்து வருகின்றார். தனது விடுமுறையை கழிக்க அண்மையில், தனியாக யாழ்ப்பாணம் வந்து…
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிகளில் புதைக்கப்பட்டவர்கள் அங்கு அழைத்துவரப்பட்டு புதைகுழிகள் முன்பதாக கொல்லபட்டு புதைக்கப்பட்டிருப்பதான சந்தேகங்கள் வலுத்துவருகின்றது. இன்றைய தினம் வியாழக்கிழமை செம்மணி மனித புதைகுழியில் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சிறிய பால் போத்தலும் சிறிய இரும்பு உருண்டைகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டு வiகைப்படுத்தப்பட்டு நீதிமன்றினால்…