Category யாழ்ப்பாணம்

சி.வியை காப்பாற்ற இனி யார் இருக்கிறார்கள் ? சித்தார்த்தன் கவலை

வடமாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப்பிரேரணைக்குக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி தாமே அவரைப் பாதுகாத்ததாகவும், எதிர்வருங்காலத்தில் விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக்கட்சி முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகளிலிருந்து அவரைப் பாதுகாப்பதற்கு யாரும் இல்லை எனவும் புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் என தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,  வடமாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த சி.வி.விக்னேஸ்வரனுக்கு…

மனைவியுடன் சுற்றுலா வந்த வெளிநாட்டு பிரஜை திடீரென உயிரிழப்பு!

புத்தளம் – வென்னப்புவை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர்.  இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 09.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  77 வயதுடைய பிரித்தானிய பிரஜை ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  உயிரிழந்த வெளிநாட்டு பிரஜை கடந்த மே…

யாழ். மாநகர முதல்வரானர் மதிவதனி

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. யாழ் மாநகர சபை 45 உறுப்பினர்களை கொண்ட சபையாகும்.  இலங்கை தமிழ் அரசுக் கட்சி…

நட்ட ஈடு அல்லது மாற்று காணி:தீர்வு!

தையிட்டியில் தனியார் தமிழ் மக்களது காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கெதிரான மக்கள் போராட்டம் தொடர்கின்றது. இந்நிலையில் விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளின் உரிமையாளர்களுக்கு நஸ்ட ஈடு அல்லது மாற்றுக் காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (12) இடம்பெற்ற வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்…

யாழ்.மாநகரசபை:மும்முனைப்போட்டி!

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கான முதல்வர் மற்றும் பிரதிமுதல்வர் தெரிவு நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் கட்சிகள் தத்தமது சார்பில் பெயர்களை பிரேரிக்க தயாராகியுள்ளன. இலங்கை தமிழரசு கட்சி சார்பில் மதிவதனியும் தமிழ் தேசிய பேரவை சார்பில் கிருஸ்ணகுமாரும் அதேவேளை தேசிய மக்கள் சக்தி சார்பில் கபிலனின் பெயரும் முன்மொழியப்படவுள்ளது இதனிடையே பிரதிமுதல்வர் தெரிவின்போது தனக்கு ஆதரவு தருமாறு…

காங்கிரஸின் சாவகச்சேரி சபை உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு

சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப் பதவியேற்பதற்கு எதிராகத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  இந்தச் சபைகளில் ஒன்று தவிசாளரைத் தெரிவு செய்வதற்காக கூடவிருக்கும்…

யாழ் . மாநகர முதல்வர் யார் ? கபிலனும் களத்தில்

யாழ் மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவில் தேசிய மக்கள் சக்தியும் போட்டியில் களமிறங்கவுள்ளனர். யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் நாளையதினம் வெள்ளிக்கிழமை காலை யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. யாழ் மாநகர சபை 45 உறுப்பினர்களை கொண்ட சபையாகும். அதனால் 23 ஆசனங்களை வைத்திருக்கும் கட்சியே ஆட்சியை…

செம்மணிப் புதைகுழி விவகாரம் – உண்மையையும் நீதியையும் நிலைநாட்டப்பட்ட வேண்டும்

செம்மணிப் புதைகுழி விவகாரம் கைவிடப்படும் விடயமாகவன்றி உண்மையையும் நீதியையும் நிலைநாட்டத்தக்கதாக முன்நகரவேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. செம்மணிப் புதைகுழி அகழ்வாய்வு பணிகள் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,  இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணக் குடாநாடு இருந்தபோது காணமால் ஆக்கப்பட்ட பலருக்கு…

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு – விகாரையை சூழவுள்ள காணிகள் விடுவிக்கப்படும்

தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நஷ்ட ஈடு அல்லது மாற்று காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்  வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.  அதன் போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.  தையிட்டி விகாரை…

நீதிமன்ற கட்டளையை மீறினார்கள் என தையிட்டி விகாரைக்கு எதிராக போராடியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

யாழ்ப்பாணம் , பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மல்லாகம் நீதவான் நீதிமன்றை தவறாக வழிநடத்துவதாக மன்றில் சட்டத்தரணிகள் தமது சமர்ப்பனங்களில் தெரிவித்துள்ளனர்.  நீதிமன்ற கட்டளையை மீறி, தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  குறித்த வழக்கு விசாரணைகளின் போது , போராட்டம் நடத்தியவர் சார்பாக…