Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
நெடுந்தீவு பிரதான வீதி இலங்கை வங்கி கிளை அருகே நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பாதசாரி உயிரிழந்துள்ளார். நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த பரணாந்து சகாயதேவதாஸ் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார். வேகமாக வந்த முச்சக்கரவண்டி வீதியினை கடக்க முற்பட்டவரை மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு,வைத்திய…
வலிகாமம் வடக்கில் இருந்து தாம் வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னமும் தம்மை தமது சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தவில்லை என அப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில், போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ளபோதும் எங்களின் காணிகள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில்…
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில் யாழ்ப்பாணம் பல்கலைகழக தொல்லியல் துறை மாணவர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மனித புதைகுழி காணப்படும் நிலையில் , முதல் கட்ட அகழ்வு பணிகளில் 19 மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அந்நிலையில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளை…
உள்ளூராட்சி மன்ற தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய 2ஆயிரத்து 433 உள்ளூராட்சி வேட்பாளர்களின் பெயர்கள் சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாருக்கு அனுப்பப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்தார். அறிக்கைகளை சமர்ப்பித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்ற பிறகு, அந்த வேட்பாளர்கள் மீது பொலிஸார் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளனர். உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 25ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் என்று உறுதியான வகையில் அறியமுடிகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 23 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். நான்கு நாள்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர் பல்வேறு தரப்பினரையும்…
யாழ்ப்பாணத்தில் மட்டுமே சீ.வீ.கே.சிவஞானம்-எம்.ஏ.சுமந்திரனின் கட்டுப்பாட்டை தமிழரசு பேண முற்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி தொடங்கி வவுனியா,முல்லைத்தீவு மற்றும் திருகோணமலையென கைகள் கடந்து செல்ல தொடங்கியுள்ளது. இதனிடையே வவுனியாவை தொடர்ந்து திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுடன் இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைப்பது குறித்த இறுதி முடிவு இன்று எடுக்கப்படும் என அக்கட்சியின் நாடாளுமன்ற…
யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி கிழக்கு பகுதியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். பலாலி பகுதியில் இருந்து 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி அப்பகுதி மக்கள் யுத்தம் காரணமாக வெளியேறி இன்றுடன் 35 ஆண்டுகள் கடந்தும் அப்பகுதி மக்கள் இன்னமும் மீள்…
யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. கடுமையான கட்டுப்பாடுகளுடன் , விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் குறித்த ஆலயத்திற்கு தினமும் சென்று வழிபாடு செய்வதற்கு…
தியாக தீபம் திலீபன் உட்பட ஐம்பதாயிரம் மாவீரர்கள் போராளிகளால் நிராகரிக்கப்பட்ட ஒற்றையாட்சி சத்தியபிரமாணத்தை எடுத்து விட்டு பதவிக்காக திலீபன் முன்பாக வழிபாடு செய்வது திலீபனின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் செயல் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், தியாக தீபம் திலீபன் சிங்கள பேரினவாத ஒற்றையாட்சியை நிராகரித்து தனி நாட்டை கோரிய…
ஈழத்து பாடலாசிரியர் வீ.பரந்தாமன் காலமானார் ஈழத்து பண்டிதர், பாடலாசிரியர் வீ.பரந்தாமன் உடல்நல குறைவால் நேற்றைய தினம் சனிக்கிழமை காலமானார். ‘மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்’ என்ற பாடலில் தொடங்கி பல்வேறு பாடல்களை எழுதியதுடன் மட்டுமின்றி ஈழப் போராட்டக்களத்தில் பல்வேறு பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.