Category யாழ்ப்பாணம்

வலி. வடக்கு காணிகளை விடுவிக்க கோரி இரண்டாம் நாளாக தொடரும் போராட்டம்

வலி. வடக்கு காணிகளை விடுவிக்க கோரி இரண்டாம் நாளாக தொடரும் போராட்டம் வலிகாமம் வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம் மயிலிட்டி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  2ஆம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்து. 30 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி குறித்த அமைதிவழிப் போராட்டம் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது.

இலஞ்சம் பெற்ற இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது

இலஞ்சம் பெற்ற இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது அம்பாறை நகரில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மணல் போக்குவரத்தை எவ்வித இடையூறுமின்றி மேற்கொள்வதற்கு அம்பாறையைச் சேர்ந்த வர்த்தகரொருவரிடம் 25ஆயிரம் ரூபாயை இலஞ்சமாக பெற்றமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குறித்த இருவரும் கைது…

யாழில் தேடப்பட்டு வந்த நபர்கள் தலைமன்னார் ஊடாக தமிழகம் தப்பி செல்ல முற்பட்ட நிலையில் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர்கள் தமிழகம் தப்பி செல்ல முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த மூவர் தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தமிழகத்திற்கு தப்பி செல்ல முற்பட்ட வேளை , தலைமன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்…

“அணையா விளக்கு” போராட்டத்திற்கு அணிதிரளுங்கள்

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் நடைபெறவுள்ள “அணையா விளக்கு” போராட்டத்திற்கு தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,  செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நீதி கோரியும், சர்வதேசக் கண்காணிப்புடன் மனிதப் புதைகுழி  அகழ்வை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் ‘மக்கள்…

யாழில். லிப்ட் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

யாழில். லிப்ட் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் லிப்ட் விபத்தில் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.  நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் பணியாளராக டிலக்சன் (வயது 20) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.  விடுதியில் பணியில் இருந்த போது , மேல் தளத்திற்கு செல்வதற்காக லிப்டில் ஏறிய போது , லிப்டினுள்…

யாழில். சகோதரர்கள் மீது வாள் வெட்டு தாக்குதல் – மூவர் வாள்களுடன் கைது

யாழ்ப்பாணத்தில் சகோதரர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை பொலிஸார் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.  கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உதயபுரம் பகுதியில் சகோதரர்கள் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தனர்.  அது தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான நபர்களால்…

யாழில் இந்திய யோகா?

இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆதரவாளர்களுடன் சர்வதேச யோகா தினம் 2025 யாழ் கலாச்சார மையத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.யோகா பயிற்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 1,700 இற்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கலந்து கொண்டதாக யாழிலுள்ள இந்திய துணைதூதரகம் அறிவித்துள்ளது. இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி வரவேற்க விழாவில், யாழ்ப்பாண மாநகர சபை…

மயிலிட்டி சந்தியில் போராட்டம்!

மயிலிட்டி சந்தியில் போராட்டம்! யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள இருந்து விடுவிக்கப்படாத மீதி காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் மயிலிட்டி சந்தியில் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.  முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளுராட்சி சபை தேர்தல் காலப்பகுதியில் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தின் ஒரு வீதியையும் காணியின் சிறு பகுதியையும் ரசு விடுத்திருந்தது.எனினும் தேர்தல்…

செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி ஏற்றப்படவுள்ள அணையா தீபம்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி மூன்று நாட்கள் அணையா தீபம் என தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் செயல் அமைப்பு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், குறித்த போராட்டமானது அணையா தீபம் ஏற்றி திங்கட்கிழமை காலை முதல் புதன்கிழமை…

வழுக்கையாற்றை புனரமைப்பது தொடர்பில் ஆய்வு

யாழ்ப்பாணத்தில் வழுக்கியாற்றைப் புனரமைப்பு செய்து நிலத்தடி நீர்த் தேவை மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஆய்வு ஒன்றினை யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பித்துள்ளனர் யாழ்ப்பாணம் வறுத்தலைவிளான் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கும் வழுக்கையாறு அராலியில் முடிவடைகிறது.  இந்த வழுக்கையாறு என்பது மழை காலத்தில் வெள்ள நீர் ஓடுவதால் உருவாகும்…