Category யாழ்ப்பாணம்

யாழில். மேற்கொள்ளவுள்ள மீள்குடியேற்றம் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட யாழ். கட்டளை தளபதி

யாழ் .  மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மீள் குடியேற்றங்கள் தொடர்பில் யாழ் . மாவட்ட கட்டளை தளபதி , மாவட்ட செயலருடன் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.  யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் கே. ஏ. என். ரசீஹ குமார, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை இன்றைய தினம்…

தமிழர் பிரச்சனை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இலங்கை வந்ததாக ஐ.நா ஆணையாளர் தெரிவிப்பு

மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சினைகளால் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சினை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தன்னிடம் தெரிவித்தார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள்…

யாழில். பொலிசாரை மோத முற்பட்ட டிப்பர் – துரத்தி சென்று பிடித்த பொலிஸார்

பொலிசாரின் வாகனத்தினை மோதி விபத்துக்குள்ளாக்கும் விதத்தில் டிப்பர் வாகனத்தை செலுத்தி தப்பி சென்ற டிப்பர் வாகன சாரதியை சுமார் 04 கிலோ மீற்றர் தூரம் துரத்தி சென்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.  பளை பகுதியில் இருந்து மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தினை நுணாவில் பகுதியில் சாவகச்சேரி பொலிஸார் மறித்த வேளை வாகனத்தினை பொலிஸாரை மோதும்…

ஊடகவியலாளர்களுக்கு தடையேற்படுத்திய பொலிஸார்

செம்மணி மனித புதைகுழியினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் நேரில் பார்வையிடுவதனை ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிட பொலிஸார் அனுமதி மறுத்திருந்தனர்.  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க்  நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்து செம்மணி மனித புதைகுழி பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.  அதனை…

செம்மணியில் செப்புப்பட்டயம்!

செம்மணியில் செப்புப்பட்டயம்! இன்று நிறைவுபெற்ற செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரும் மக்கள் செயலின் அணையா விளக்கு போராட்டத்தின்போது ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் அவர்களிடம் கையளிக்கப்பட்ட ஆறம்சக் கோரிக்கைகள் அடங்கிய செப்புப் பட்டயம். No comments உலகம் ஐரோப்பா அதிகம் வாசிக்கப்பட்டவை ஓமந்தை கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது  குறித்த விபத்து…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையருக்கு எடுத்து கூறிய வடக்கு ஆளுநர்

காணி விடுவிப்புத் தொடர்பிலும், இராணுவப் பிரசன்னம் மற்றும் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் மேற்கொள்வது தொடர்பிலும் வடமாகாண ஆளூனரிடம் கேட்டறிந்து கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்,  காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பிலும் கரிசனையை வெளிப்படுத்தியதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான குழுவினருக்கும், ஐ.நா. மனித உரிமைகள்…

“செம்மணி படுகொலை நாயகர்கள்” பதாகையை ஏந்தி நின்ற பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்

“செம்மணி படுகொலை நாயகர்கள்” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மற்றும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்ட பதாகையை இருவர் கைகளில் ஏந்தி இருந்தனர்  யாழ் . வளைவுக்கு அருகில், செம்மணி படுகொலைக்கு நீதி கோரி அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் , இன்றைய தினம் புதன்கிழமை…

சர்வதேச கண்காணிப்புடன் செம்மணி மனித புதைகுழி அகழ்வுகள் நடாத்தப்பட வேண்டும்

சர்வதேச கண்காணிப்புடன் செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என செம்மணி மனித புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்ப்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க்  கிடம் கோரியுள்ளனர்.  யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர்…

ஜநா ஆணையர் சந்திப்புக்களில்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட்டுள்ளார். இலங்கை விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்திருந்த அவர் செம்மணிக்கு பயணித்ததுடன் அணையா விளக்கு போராட்டகளத்தில் மக்களை சந்தித்திருந்தார். முன்னதாக கொலை செய்யப்பட்ட மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு மௌன அஞ்சலியையும்…

அணையா விளக்கு, அடித்து விரட்டியது!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்ற ‘அணையா விளக்கு’ போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான குழுவினரை போராட்ட களத்தில் நின்ற மக்கள் கலைத்து வெளியேற்றியிருந்தனர். முன்னதாக ‘அணையா விளக்கு’ போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற வட மாகாண சபை அவைத் தலைவரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவருமான சீ.வி.கே.…