Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘பாதுகாப்பான வீதி, பாதுகாப்பான சுகாதாரம்’ (Safe Road, Safe health) என்ற தொனிப்பொருளில் வீதி விபத்துக்களை தடுப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என குழந்தை மருத்துவ நிபுணர் பி.சயந்தன் யோசனையை முன் வைத்துள்ளார். விபத்துக்களை தணிப்பது மற்றும் தடுப்பது தொடர்பான பொறிமுறையை உருவாக்கும் நோக்கிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய…
செம்மணி மனித புதைகுழியில் இதுவரை மொத்தமாக 63 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று புதன்கிழமை மட்டும் 7 என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அவற்றில் 54 முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் பதினான்காம்; நாளாக இன்றைய தினமான புதன்கிழமை அகழ்வுகள் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது. அதேவேளை…
யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த 1995…
செம்மணியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேலும் 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 04 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 14ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன் போது…
ஆலய கும்பாபிஷேகத்தில் தங்க நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் கைதான நான்கு பெண்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் . நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கடந்த திங்கட்கிழமை மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றது. அதன் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். அவ்வேளை தாலிக்கொடி ஒன்று உள்ளிட்ட ஐவரின் தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளது. …
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் வீட்டில் இருந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை 15 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். பின்னர்…
யாழ்ப்பாணம் செம்மணியில் இரண்டாவது புதைகுழி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் புதிய தடயவியல் அகழ்வாய்வு தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சித்துப்பாத்தி மயானத்தில் மனிதப் புதைகுழியாக ஏற்கனவே ஒரு புதைகுழி அடையாளப்படுத்தப்பட்டு அங்கு அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த புதைகுழியில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில் 56 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில்…
யாழ்ப்பாணத்தில் நண்பர்களுடன் மது அருந்தியவர் இன்றைய தினம் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். நகர் பகுதியை சேர்ந்த அழகரத்தினம் கிறிஸ்டி பால்ராஜ் (வயது 48) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முழவை சந்திக்கு அருகில் உள்ள வீதியோர பூங்காவின் ஆல மரம் ஒன்றின் கீழ் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை , உயிரிழந்த நபரும் வேறு நபர்களும்…
சட்டவிரோத மணல் கடத்தலில் ஒரு சில பொலிஸாருக்குச் சொந்தமான டிப்பர் வாகனங்களும் ஈடுபடுகின்றன வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் மணல் விநியோகத்தை சீராக்குவது, சுண்ணாம்புக்கல் அகழ்வு மற்றும் விநியோகத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம்…
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயவிற்கு சிக்கலாகும் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தொடர்புடைய வழக்கு கடைசியாக 2014 ஆம் ஆண்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். விசாரணையில் எந்த முன்னேற்றமும்…