Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு போக்குவரத்துக் காவல்துறையினரின் வெறியாட்டத்தில் உந்துருளியில் வந்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். இதனால் கொதிப்படைந்த அந்தப் பகுதி மக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. நேற்று இரவு 10 மணியளவில் வவுனியா, கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு உந்துருளியில் காவல்துறையினர்…
மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் வாகனத்தினை ஆணிக்கட்டைகளை வீசி பருத்தித்துறை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். யாழ்ப்பாணம் , வல்லிபுரம் பகுதியில் இருந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தினை மந்திகை சந்திக்கு அருகில் கடமையில் இருந்து பொலிஸார் வழிமறித்த போது, டிப்பர் சாரதி வாகனத்தினை நிறுத்தாது தொடர்ந்து பயணித்துள்ளார். …
செம்மணி மனிதப் புதை குழியில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யுத்த காலப்பகுதியில் இராணுவத்தினர் அப்பகுதியில் குடியிருந்ததை யாராலும் மறுதலிக்க முடியாது .எனவே செம்மணி மனிதப் புதை குழியை ஆய்வு செய்ய சர்வதேச நிபுணர்களை கொண்டு வந்து ஆய்வு செய்ய…
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் இணைந்து செம்மணி புதைகுழியின் பின்னணியிலிருந்ததான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் மனிதப் புதைகுழி தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதிக்கு கடிதம் எழுப்பியுள்ளார். கடந்தகால உள்நாட்டு யுத்தம் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளில் குறிப்பாக, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மனித புதைகுழிகள் பற்றிய விடயம், இன்னமும் எமது மக்கள் மத்தியில் பல்வேறு…
தமிழ்மக்கள் கூட்டணிக் கட்சிக்குள் விரைவில் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக தமிழ்மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கட்சியின்தலைவராக நான் பொறுப்பேற்று முக்கியமான நடைமுறை அதிகாரங்களைப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் பொதுச் செயலாளருடன் பகிர்ந்து கொள்ள உத்தேசித்துள்ளேன் என க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்மக்கள் கூட்டணியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு…
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கை, பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணப் பொலிஸாராலேயே தற்போது இந்த வழக்கு கையாளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் செம்மணிப் புதைகுழிவழக்கை ஒப்படைக்க பொலிஸ் தரப்பால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று நம்பகரமாக…
வலிகாமம் வடக்கின் தையிட்டியில் பொது மக்களின் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் பூரணை தினமான வியாழக்கிழமை (10) இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது பங்காளி கட்சிகளையும் இணைத்து ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்தோடு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்…
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் இன்று வியாழக்கிழமையுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை இன்றுடன் 65ஆக உயர்வடைந்துள்ளது. இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை மதியத்துடன், தற்காலிகமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை மூன்றாம் கட்டமாக எதிர்வரும்…
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை மதியத்துடன் , தற்காலிகமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள…
நல்லூர் பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பிலான கோரிக்கை மனு ஆளூனரிடம் கையளிப்பு வடமாகாண ஆளுநரை நேரில் சந்தித்து, நல்லூர் பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பிலான கோரிக்கை மனுவை தவிசாளர் தலைமையிலான குழுவினர் கையளித்துள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தலைமையிலான உறுப்பினர்கள் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை…