Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மனைவியும் 40 வயதுடைய கணவனுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் ஜப்பானின் நரிட்டா நகரத்திற்குச் செல்வதற்காக நேற்று முன்தினம்…
யாழ்ப்பாணத்தில் 30 கிலோ ஆமை ஒன்றுடனும் 20 கிலோ ஆமை இறைச்சியுடனும் நபர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் இறால் வளர்ப்பு திட்டம் பகுதியில் கடலில் இருந்து பிடித்து வரும் ஆமைகளை பாதுகாத்து, அவற்றை இறைச்சியாக்கி விற்கப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு சென்ற…
ஆசிரியர்கள் பயணித்த பேருந்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும், அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்டவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் கோரியுள்ளார். முல்லைத்தீவில் இருந்து ஆசிரியர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது பளை பகுதியில் கல்வீசி தாக்குதல் நடாத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் ஆசியர் சங்கம்…
முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் வந்துகொண்டிருந்த ஆசிரியர்களின் பேருந்தின் மீது இனம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதலை மேற்கொண்டதில், பேருந்தின் கண்ணடிகள் சேதமடைந்துள்ளன. வடமராட்சி மற்றும் யாழ்ப்பாண நகர் பகுதிகளில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு கற்பிக்க செல்லும் ஆசிரியர்கள் தனிப்பட்ட ரீதியில் வாடகைக்கு பேருந்தினை சேவைக்காக அமர்த்தி அதில் பயணித்து பாடசாலைக்கு…
எம்மை இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் சீனா பயன்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டோம் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களில் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் கடந்த…
அரியாலையில் டிப்பர் விபத்து – ஒருவர் உயிரிழப்பு யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் , சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தமிழரசு கட்சியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை நீக்க முடியாது. சிறிதரனை நீக்க வேண்டும் என மத்திய குழுவிலும் யாரும் கோரவில்லை என தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த தேர்தல்…
தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அதன் ஊடாகவே அமைத்து தேசியத்தையும் இருப்பையும் காத்துக்கொள்ள முடியும் என தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி . கே சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழரசு…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளார். அவருக்கு எமது வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமீளாய்வு கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த…
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து தாய் மாமனும் மருமகனும் நேற்றைய தினம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை தெற்கை சேர்ந்த பெருமாள் மகிந்தன் (வயது 30) என்பவரும் , அவரது தங்கையின் மகனான தனுஷன் டனுசன் (வயது 03) ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த மகிந்தன் தனது மனைவி, தங்கை…