Category யாழ்ப்பாணம்

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது ஆதீரா Friday, July 18, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.  குருநகர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்களை பொலிஸார் சோதனையிட்ட போது , அவர்களிடம் இருந்து 90 மில்லி…

தையிட்டி விகாரைக்கு அமைச்சர்!

தையிட்டி விகாரைக்கு அமைச்சர்! வலிகாமம் வடக்கு தையிட்டி விகாரைக்கு அருகாமையில் உள்ள தனியார் காணிக்குள் புதிய கட்டுமானங்களிற்கென வெட்டப்படும் கிடங்குகளை தேசிய மக்கள் சக்தி அமைச்சர் பார்வையிட்டுள்ளார். வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் பிரசன்னத்தில் விகாரைக்கு வந்த அமைச்சர் குழுவினர்களையும் அழைத்துச் சென்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்டுமானங்களை காண்பித்துள்ளனர். ஏற்கனவே வலிகாமம் வடக்கு பிரதேசசபை…

தமிழரசு:கதிரைப்பிரச்சினை ஓய்ந்தபாடாகவில்லை!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தம்மை இடைநிறுத்தி கட்சி எடுத்த முடிவுக்கு, இடைக்காலத் தடை விதிக்குமாறு வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் இராஜேந்திரம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய வழக்கு நேற்று (16) யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினரான…

செம்மணி குழந்தைகள் ஒரே குடும்பத்தவையா?

செம்மணி மனிதப்புதைகுழியில் மீட்கப்பட்ட சிறுகுழந்தைகளது எலும்புக்கூட்டுத்தொகுதி மீதான ஆய்வுகளையடுத்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களினுடையதாக அவை இருக்கலாமென்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே நீலநிறப்புத்தகப்பை மற்றும் விளையாட்டு பொம்மை என்பவற்றுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 – 5 வயதுடைய சிறுமியின் எலும்புக்கூடாக இருக்கலாம் என சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.…

தினமும் காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரையில் இராஜேஸ்வரி அம்மனை வழிபட அனுமதி

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினம் காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரையில் தற்காலிக பாதை ஊடாக சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் ஆடிப்பிறப்பு தினமான இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் அனுமதி வழங்கியுள்ளனர்  பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு 35 வருடங்களின் பின்னர், கட்டுப்பாடுகள் இன்றி வழிபட…

யாழ் . மாநகர கழிவகற்றலில் பெரும் ஊழல் மோசடிகள் – ஆதாரங்கள் உண்டு என கபிலன் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகரசபையின் திண்மக் கழிவகற்றல் செயற்பாட்டில் பெரும் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாக யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.  யாழ்ப்பாணம் மாநகரசபையின் மாதத்துக்கான அமர்வு முதல்வர் மதிவதனி தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது,  அதன் போது, யாழ்ப்பாணம் மாநகரசபையில் 16 உழவியந்திரங்கள் வாடகை அடிப்படையில் கழிவகற்றும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றன. அவற்றுக்கான மாதாந்த…

மாறி மாறி ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கங்களும் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கவில்லை

இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை எனவும் அவ் இனப்படுகொலைக்கு இலங்கை அரசு காரணம் என்ற நிலையில், இலங்கையின் உள்நாட்டு விசாரணைகளில் முற்றிலும் எமது மக்களும் நாமும் நம்பிக்கை இழந்துள்ளோம். இவ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வலிகாமம் கிழக்கு பிரதேச…

யாழ். மாநகர சபை அமர்வை நேரலை விட்ட உறுப்பினருக்கு எச்சரிக்கை

யாழ் மாநகர சபை அமர்வை முகநூல் ஊடாக நேரலையில் ஒளிபரப்பிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினருக்கு மாநகர முதல்வரால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில், நேற்றைய தினம் புதன்கிழமை மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதன்…

” விடுதலைக்கான திறவுகோல்களை கனதியாக்குவோம் “

கறுப்பு ஜூலை ‘பொது  நினைவேந்தலும்- விடுதலைக்கான போராட்டமும்” குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினால் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.  இது தொடர்பில்,  குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பபாளர் மு.கோமகன் யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,  இதுவரை காலமும் இலங்கையின்…

வடக்கு கிழக்கை கட்டியொழுப்ப கனடா உதவும் – தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தூதுவர் உறுதி

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கை மீளக் கட்டியெழுப்புவதற்கு கனடாவும் தம்மால் முடிந்த ஒத்துழைப்பை வழங்கும் என அந்நாட்டு தூதுவர் தேசிய மக்கள் சக்தியின் யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார். இலங்கைக்கான கனடா தூதுவருக்கும், தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.ரஜீவன், ஸ்ரீபவானந்தராஜா மற்றும் க.இளங்குமரன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய…