Category முதன்மைச் செய்திகள்

ரஷ்ய இராணுவ விமானநிலையத்தைத் தாக்கியது

இன்று சனிக்கிழமையன்று உக்ரைன் இராணுவம் வோரோனேஜ் பகுதியில் உள்ள போரிசோக்லெப்ஸ்க் விமானநிலையத்தைத் தாக்கியதாகக் கூறியது. கியேவின் கூற்றுப்படி, அந்த தளத்தில் ரஷ்ய சுகோய் Su-34, Su-35S மற்றும் Su-30SM இராணுவ ஜெட் விமானங்கள் இருந்தன. அவை ஒரு கிளைட் குண்டு தாக்கியதாகக் கூறின. இதை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் பொதுமக்கள் உள்கட்டமைப்பைத் தாக்கும்…

இன்று கரும்புலிகள் நாள்! கரும்புலிகள் நெருப்பு மனிதர்கள்!!

இன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்க முடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள்.  இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும், ஏன்…. உலகத் தமிழர்களிடமும் உள்ளிருந்து இயங்கும் பெரும் விடுதலை சக்தியாக செயற்படுகிறது என்றால் அது மிகையாகாது. கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை…

செம்மணியில் மனித புதைகுழி: தமிழ் மக்களின் நீண்ட வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது! சியோபைன் மெக்டோனா

செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழி, தமிழ் மக்கள் எதிர்கொண்ட பல தசாப்த கால வலியையும், மௌனத்தையும் பறைசாற்றுவதாக பிரித்தானியாவின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டேம் சியோபைன் மெக்டோனா (Dame Siobhain McDonagh) தெரிவித்துள்ளார்.  இந்த நிலையில் உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை வழங்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

டீனேஜ் குடிப்பழக்கத்திற்கு கடுமையான விதிகள் வேண்டும் – யேர்மனியர்கள்

கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு யேர்மனியர்கள் 14 வயது சிறுவர்கள் மது அருந்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். யேர்மனியில், 14 வயது டீனேஜர்கள் சட்டப்பூர்வ பாதுகாவலருடன் இருந்தால், ஒரு பீர் அல்லது ஒரு கிளாஸ் ஒயின் வாங்கி குடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.    யேர்மன் சுகாதார காப்பீட்டு நிறுவனமான Kaufmännische Krankencasse (KKH) ஆல்…

இந்தோனேசியாவில் படகு மூழ்கியது: பலரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் பிரபலமான சுற்றுலாத் தீவான பாலி அருகே  பயணிகளையும், வாகனங்களையும் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தில் பலரைக் காணவில்லை என உள்ளூர் அவசர அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை தெரிவித்தனர். இந்தப் படகில் 53 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் மற்றும் 22 வாகனங்கள் இருந்ததாக ஜாவாவை தளமாகக் கொண்ட சுரபயா தேடல் மற்றும் மீட்பு நிறுவனம்…

மேற்குக் கரையை கைப்பற்றுவதற்கான இது நல்ல வாய்ப்பு – இஸ்ரேல் நிதி அமைச்சர்

தற்போதைய காலம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையைக் கைப்பற்றுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை வழங்குவதாக நீதி அமைச்சர் யாரிவ் லெவின் கூறுவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போதைய பிரச்சினைகளுக்கு அப்பால் இதை நாம் தவறவிடக்கூடாத வரலாற்று வாய்ப்பின் காலம் எனக் கூறினார். இறையாண்மைக்கான நேரம் வந்துவிட்டது. இறையாண்மையைப் பயன்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்த விஷயத்தில் எனது…

உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்புவதை நிறுத்தியுள்ளது அமெரிக்கா

ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதால், பைடன் நிர்வாகத்தின் கீழ் வாக்குறுதியளிக்கப்பட்ட சில ஆயுத விநியோகங்களை கியேவுக்கு நிறுத்துவதாக அமெரிக்கா கூறுகிறது. உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளுக்கு நமது நாட்டின் இராணுவ ஆதரவு மற்றும் உதவியை மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் நலன்களை முதன்மைப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று வெள்ளை மாளிகை செய்தித்…

60 நாள் காசா போர் நிறுத்தம்: இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவிப்பு!

காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கான தேவையான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் போது, ​​போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்று டிரம்ப் ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில் கூறினார் ஆனால் நிபந்தனைகள் என்ன என்பதை அவர் தெரிவிக்கவில்லை.…

ஐரோப்பாவில் கொழுத்தும் வெப்ப அலை!

இந்த ஜூன் மாதத்தில், ஐரோப்பாவின் பல பகுதிகள் கோடை மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெப்பநிலையால் வெயில் கொளுத்தியது. புவி வெப்பமடைதலால் இதற்கு காணரம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஐரோப்பா கோடை வெப்பத்தில் சுட்டெரித்து வருவதால், இத்தாலி மற்றும் பிரான்சின் சில பகுதிகள் சிவப்பு எச்சரிக்கையில் உள்ளன, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் அதிக வெப்பநிலையைக்…

செம்மணி புதைகுழியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட சிறு பிள்ளையின் எலும்பு கூட்டு தொகுதி

செம்மணி மனித புதைகுழி ஒன்றினுள் இருந்து சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.  செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஆறாம் நாள் பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.  அதன் போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்தக பையை ஒத்த நீல நிற பையுடன் காணப்பட்ட சிறு பிள்ளையின் எலும்புக்கூட்டு தொகுதி…