Category முதன்மைச் செய்திகள்

40 வருட போராட்டம் முடிவுக்கு வந்தது: ஆயுதங்களை கீழே போடத்தொங்கியது பி.கே.கே

40 ஆண்டுகால் குர்திஸ்தான் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஜூலை 11, 2025 அன்று ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள சுலைமானியாவில் நடந்த ஒரு விழாவின் போது குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த (PKK) போராளிகள் தங்களது ஆயுதங்களை கீழே போட்டனர்.   ஈராக்கிய குர்திஸ்தானில் நேற்று நடைபெற்ற ஆயுதங்களைக் கீழே போடும் விழாவில் பி.கே.கே  போராளிகள்…

3500 ஆண்டுகள் பழமையான பெனிகோ வர்த்தக நகரத்தைக் கண்டுபிடித்த தொல்பொருள் ஆராச்சியாளர்கள்

பெருவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 3500 ஆண்டுகள் பழமையான பெனிகோ வர்த்தக நகரத்தைக் கண்டுபிடித்தனர். பெருவியன் மாகாணமான பாரான்காவில், சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நகரத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 600 மீட்டர் உயரத்தில் ஒரு சரிவில் கட்டப்பட்டது மற்றும் அமெரிக்க கண்டத்தின் பழமையான நகரமான கேரல் அருகே அமைந்துள்ளது. பெனிகோ…

கட்டாரில் உள்ள அமெரிக்க விமானத் தளம் ஈரான் தாக்கியதை ஒப்புக்கொண்டது அமெரிக்கா

ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்களை குறிவைத்து கடந்த மாதம் 13ம் திகதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் இடையே போர் வெடித்தது. 12 நாட்கள் நீடித்த இந்த போரின்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அமெரிக்க குண்டுவீச்சு விமானம் மூலம் ஈரான்…

உக்ரைன் மீது ரஷ்யா பொிய தாக்குதல்!

உக்ரைன் மீது ரஷ்யா இரவு முழுவதும் மற்றொரு பெரிய தாக்குதலை நடத்தியது. உக்ரைனின் ருமேனியா எல்லைக்கு அருகிலுள்ள மேற்கு நகரமான செர்னிவ்ட்சியில், வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் ரஷ்ய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 14 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறியதை உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா கண்டித்துள்ளார் .…

வவுனியாவில் காவல்துயையின் அடாவடி: குடும்பஸ்தர் பலி!

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு போக்குவரத்துக் காவல்துறையினரின் வெறியாட்டத்தில் உந்துருளியில் வந்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். இதனால் கொதிப்படைந்த அந்தப் பகுதி மக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. நேற்று இரவு 10 மணியளவில் வவுனியா, கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு உந்துருளியில் காவல்துறையினர்…

புதிய பங்காளிகளுடன் முன்னணி ஆர்ப்பாட்டம்!

வலிகாமம் வடக்கின் தையிட்டியில் பொது மக்களின் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்  பூரணை தினமான வியாழக்கிழமை (10) இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது பங்காளி கட்சிகளையும் இணைத்து ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்தோடு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்…

செம்மணி புதைகுழி, ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: சர்வதேச விசாரணை வேண்டும் – சாணக்கியன்

செம்மணி மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்றவற்றுக்கு சர்வதேச விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும்  இல்லாவிடின் இதற்கான நீதி கிடைக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (09) நடைபெற்ற ஒத்திவைக்கும் பிரேரணையின் போதே இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும்  கருத்து தெரிவிக்கையில், சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தேன் அதில் சர்ச்சைக்குரிய…

பிரான்ஸ் மார்சேய் அருகே பெரும் புகை மேகங்கள்: குடியிருப்பாளர்களை பயமுறுத்தும் தீ!

பிரான்சின் இரண்டாவது பெரிய நகரமான மார்சேயில் நகரவாசிகளை பீதியடையச் செய்யும் வகையில், மிகப்பெரிய புகை மேகங்களுடன் கூடிய காட்டுத்தீ ஒன்று கடலோர பெருநகரத்தை நோக்கி முன்னேறி வருகிறது.  தீயை அணைக்க 230 அவசர வாகனங்கள், தீயணைப்பு விமானங்கள் மற்றும் உலங்கு வானூர்திகளுடன் 700க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.  மக்கள் தொகை மற்றும் கட்டிடங்களைப் பாதுகாக்க…

தையிட்டி காணி அபகரிப்பு: போராட்டதிற்கு முன்னணி அழைப்பு!

தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து இலங்கை இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சட்டவிரோத விகாரைக் கட்டிடத்துக்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இப்போராட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் ஜூலை 9 (புதன்கிழமை) மாலை 4:30 மணி…

வலி தெற்கில் அமர்வு ஆரம்பமாகும் போது குழப்பம்!

யாழ்.வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று சபையின் தவிசாளர் தியாகராசா பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது சபையின் தீர்மானங்களுக்கு மாறாக, தவிசாளருக்கும் தெரிவிக்காமல் செயலாளர் தன்னிச்சையாக செயல்படுவதாக உறுப்பினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனால் சபையின் ஆரம்பத்தில் குழப்பமான நிலை ஏற்பட்டதை அடுத்து தவிசாளரால் சபை அமர்வு 20 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் சபை…