Category முதன்மைச் செய்திகள்

பிரெஞ்சு பொது போக்குவரத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரிப்வு

பிரெஞ்சு பொது போக்குவரத்தில் பாலியல் துன்புறுத்தல் அதிகரித்து வருவதாக அறிக்கை தெரிவிக்கிறது. இன்று திங்களன்று வெளியிடப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த தேசிய ஆய்வகத்தின் ( மிப்ரோஃப்) கடந்த 10 ஆண்டுகள் மேற்கொண்ட ஆய்வுகளைின் அடிப்படையில் இந்த அறிக்கையை தொகுத்து வெளியிட்டது. பொதுப் போக்குவரத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளில் 86…

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பொறுப்பேற்கவுள்ளார்

கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் புதிய தலைவராக முன்னாள் மத்திய வங்கி ஆளுநரான மார்க் கார்னி நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டார். இவரே  நாட்டின் அடுத்த பிரதமராக வருவார். லிபரல் கட்சித் தலைமைக்கான வாக்குகளில் 85.9% வாக்குகளைப் பெற்று கார்னி  வென்றார்.  ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த  ஜஸ்டின் ட்ரூடோ ஜனவரியில் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்…

ஜெர்மனியில்13 விமான நிலையங்களில் வேலை நிறுத்தம்: பல விமானங்கள் இரத்தாகின!

யேர்மனி முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வேலைநிறுத்தங்கள் நடவடிக்கைகளை கிட்டத்தட்ட நிறுத்தியுள்ளன. ஏனெனில் சேவை ஊழியர்கள், தரை ஊழியர்கள் மற்றும் விமானப் பாதுகாப்புப் பணியாளர்கள் 24 மணி நேர வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 2.5 மில்லியன் பொதுத்துறை ஊழியர்களுக்கு கூட்டு ஊதிய ஒப்பந்தத்தை கோரி வெர்டி தொழிற்சங்கம் போராடி வருகிறது. இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை…

தமிழரசுக் கட்சியின் இயங்குதளத்தை மெல்ல மெல்ல கொழும்புக்கு மாற்றி அதன் தலைமைப் பதவியை கைப்பற்றும் இலக்குடனேயே எதிர்வரும் உள்;ராட்சித் தேர்தலில் கட்சியை அங்கு களமிறக்கும் முடிவில் சுமந்திரன் தீவிரமாக இருப்பதாக கட்சி மட்டத்தில் கருத்து நிலவுகிறது.   அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு செவ்வி வழங்கப்போன இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க மூக்குடைபட்டு நின்ற…

சிரியப்படைகள் மற்றும் கிளர்ச்சியார்கள் மோதல்: 1000 பேரையில் உயிரிழப்பு

சிரியாவின் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள லடாகியா, டர்டோஸ் மாகாணங்களில் கிளர்ச்சியாளர்களுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே கடந்த 2 தினங்களாக மோதல் நடைபெற்று வருகிறது.  பாதுகாப்புப்படையினரின் சோதனைச்சாவடிகள், இராணுவ நிலைகள், ரோந்து வாகனங்களை குறிவைத்து அல் அசாத் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப்படையினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், கிளர்ச்சியாளர்களுக்கும். பாதுகாப்புப்படையினருக்கும் இடையே…

உள்ளாட்சித் தேர்தல்கள்: 18 கட்சிகள், 57 சுயேச்சைக் குழுக்கள் வைப்புத்தொகை செலுத்தின

2025 உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை வைப்புத் தொகையைச் செலுத்தியுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மார்ச் 3 ஆம் திகதி தொடங்கிய வைப்புத்தொகை ஏற்றுக்கொள்ளும் செயல்முறையின்படி, வெள்ளிக்கிழமை (மார்ச் 7) மாலை 4.15 மணி நிலவரப்படி 168 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வைப்புத்தொகைகள் வைக்கப்பட்டுள்ளன என்று அது…

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) வவுனியாவில் நடைபெறவுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதோடு உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் சமர்ப்பிப்பு, வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தேர்தலைக் கையாளுதல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்படவுள்ளது. எனினும், நிகழ்ச்சி நிரலில் ஏனைய விடயங்கள் என்று தலைப்பிடப்பட்டுள்ள நிலையில்…

டொராண்டோ பப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயமடைந்தனர்

கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள ஒரு பப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பலர் பேர் காயமடைந்துள்ளதாகவும், மூன்று சந்தேக நபர்கள் இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும் அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கிழக்கு டொராண்டோவில் உள்ள ஸ்கார்பரோ நகர மையத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 22:39 மணிக்கு (சனிக்கிழமை GMT 03:39) துப்பாக்கிச் சூடு நடந்தது.…

நீதியின்றி இறந்து கொண்டிருக்கின்றோம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்றுவரை தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தநிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 வருடங்களுக்கு மேலாக நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டு வரும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்…

சிரியப் படைகள் மீது அசாத்துக்கு விசுவாசமான போராளிகள் தாக்குதல்: 70 பேர் பலி!

சிரியாவில் அரசாங்கப் பாதுகாப்புப் படையினருக்கும் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்துக்கு விசுவாசமான போராளிகளுக்கும் இடையிலான சண்டையில் நடந்த சண்டையில் 70க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். பலர் கைது செய்யப்பட்டனர் என சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது. முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்துக்கு விசுவாசமான போராளிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதில்…