Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
எங்கள் பொருளாதாரங்களின் ஆழமான ஒருங்கிணைப்பு மற்றும் நெருக்கமான பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்காவுடன் நாங்கள் கொண்டிருந்த பழைய உறவு முடிந்துவிட்டது என கனடாவின் பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார். அமெரிக்காவுடனான வர்த்தக தகராறில் சமீபத்திய முன்னேற்றங்களுக்கு கனடாவின் பதில் குறித்து அமைச்சரவை உறுப்பினர்களுடன் கார்னி விவாதித்தார். இதன்போது அவர் இக்கருத்தை வெளியிட்டார்.…
மியான்மரில் உள்ள சகாயிங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளூர் நேரப்படி மதியம் 12:50 மணியளவில் (0620 GMT/UTC) நிலநடுக்கம் ஏற்பட்டது என USGS தெரிவித்துள்ளது. இங்கே நடந்த நிலநடுக்கத்தில் சாலைகளில் வெடிப்புகள் மற்றும் வளைவுகள் ஏற்பட்டன. அத்துடன் வீடுகளின் கூரைகளும் துண்டு துண்டாக உடைந்து விடுந்தன. ஐந்து மாடிக் கட்டிடம் இந்து விழுந்தது.…
புற்றுநோய் சிகிச்சையின் போது தற்காலிக பக்க விளைவுகளை சந்தித்த பின்னர், மன்னர் மூன்றாம் சார்லஸ் நேற்று வியாழக்கிழமை மருத்துவமனையில் சிறிது நேரம் கழித்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. மன்னர் கிளாரன்ஸ் மாளிகைக்குத் திரும்பினார். அங்கே அவர் அரசு ஆவணங்களில் தொடர்ந்து பணியாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை பேர்மிங்காம் செல்வதற்கான சுற்றுப்பயணத்தை அவர் இரத்து செய்துள்ளார். திட்டமிடப்பட்ட…
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமின் மையப்பகுதியல் நடத்தப்டப்ட கத்திக்குத்து சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நேற்று வியாழக்கிழமை டேம் சதுக்கத்திற்கு அருகிலுள்ள சிண்ட் நிக்கோலாஸ்ட்ராட்டில் சந்தேக நபர் பலரை கத்தியால் குத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களில் 67 வயது பெண் மற்றும் 69 வயது ஆண் இருவரும் அமெரிக்க…
ஆஸ்திரேலியாவில் பிரதமர் அல்பானீஸ் பொதுத் தேர்தலுக்கு இன்று வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்துள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மே 3 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள், அதிக பணவீக்கம் மற்றும் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வீட்டுவசதி மற்றும் வாடகை போன்ற காரணங்களில் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். தேர்தலை…
ரஷ்யாவுடனான சாத்தியமான போர்நிறுத்தம் குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனின் பாதுகாப்பை வலுப்படுத்த, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உட்பட ஐரோப்பிய தலைவர்களை ஒன்றிணைத்து, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பாரிஸில் ஒரு உயர்மட்ட உச்சிமாநாட்டை நடத்துகிறார். எலிசே அரண்மனையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 27 நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்கள்…
ஐரோப்பா முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையில் இன்று வியாழக்கிழமை காலை முதல் ஐந்து நாடுகளில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக சொத்துக்களில் காவல்துறையினர் சோதனைகளை நடத்தி வருகின்றன. யேர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, போலந்து மற்றும் ஸ்பெயினில் சந்தேக நபர்களுக்கு பதினொரு கைது பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக யேர்மன் சட்ட அமலாக்க அதிகாரிகள் அறிவித்தனர். மேலும்…
எகிப்து கடற்கரையில் செங்கடலில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் ஆறு பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்திருக்கலாம் என்று உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டிஷ் மற்றும் ஜெர்மன் சுற்றுலாப் பயணிகளுக்குப் பிடித்தமான இடமான செங்கடல் கடற்கரையில் உள்ள ஹுர்காடா நகரத்தில் பல ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.…
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் 24 சதவீத சம்பள உயர்வை மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை அறிவித்துள்ளது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இதுவரை மாதம் ரூ.1 இலட்சமாக இருந்து. இனிவரும் காலத்தில் ரூ.1.24 இலட்சம் சம்பளம் வழங்கப்படும். விலை உயர்வுக்கான கணக்கீடு செலவு பணவீக்க குறியீட்டின் அடிப்படையில் இந்த உயர்வு வழங்கப்படுகிறது. நாடாளுமன்ற விவகார அமைச்சகம், தற்போதைய…
கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி, இயக்கச்சி கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாகக் காணி ஒன்றை தமதாக்கி கொள்வதற்காகச் சிலர் பனை மரங்களை அழிப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பிட்ட சில நாட்களுக்குள் நூற்றுக்கணக்கான பனைகள் அழிக்கப்பட்டதால் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பனை அபிவிருத்தி அதிகார…