Category முதன்மைச் செய்திகள்

யாழ். பல்கலையில் அன்னை பூபதி அம்மாவின் 37வது ஆண்டு நினைவேந்தல்

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்னை பூபதியின் நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன் போது அகவணக்கம் செலுத்தப்பட்டு, அன்னை பூபதியின் திருவுருப்படத்திற்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில்…

ஹவுத்திகளின் எண்ணெய் முனையம் மீதான அமெரிக்க தாக்குதல்: 58 பேர் பலி! 126 பேர் காயம்!

ஹவுத்தி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் செங்கடல் கடற்கரையில் உள்ள ஒரு முக்கிய எண்ணெய் முனையம் மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 58 பேர் கொல்லப்பட்டதாகவும், 126 பேர் காயமடைந்ததாகவும் ஹவுத்திகளால் நடத்தப்படும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி பயங்கரவாதிகளுக்கான எரிபொருள் மூலத்தை அகற்றவும், அவர்களின் சட்டவிரோத வருவாயை இழக்கவும் ராஸ்…

முன்னேற்றம் இல்லை என்றால் உக்ரைன் அமைதிப் பேச்சுக்களிலிருந்து அமெரிக்கா வெளியேறும்

ரஷ்யா-உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படாவிட்டால், சில நாட்களுக்குள் அமெரிக்கா அதை கைவிடும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ எச்சரித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை பாரிஸில் ஐரோப்பிய தலைவர்களுடனான ஒரு சந்திப்பைத் தொடர்ந்து, ரூபியோ இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார் நாங்கள் இந்த முயற்சியை வாரக்கணக்கிலோ அல்லது மாதக்கணக்கிலோ தொடரப் போவதில்லை…

கோகோ விலை உயர்வு: முயல்கள் உற்பத்தி குறைந்தது!

கோகோ விலைகள் உயர்ந்து வருவதால் யேர்மனியின் உற்பத்தியாளர்கள் கடந்த ஆண்டை விட ஈஸ்டருக்கு முன்னதாக குறைவான சாக்லேட் முயல்களை உற்பத்தி செய்ததாக இன்று வெள்ளிக்கிழமை ஒரு தொழில்துறை சங்கம் அறிவித்தது. கடந்த ஆண்டின் முதல் மாதங்களில் உலகளாவிய கோகோ விலைகள் நான்கு மடங்கு அதிகரித்தன, மேலும் மேற்கு ஆப்பிரிக்காவில் கோகோ வீங்கிய தளிர் வைரஸ் மற்றும்…

கோகோ விநியோக நெருக்கடி: ஈஸ்டர் சாக்லேட் விலை உயர்ந்தது!

ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக சாக்லேட் விலைகள் உயர்ந்துள்ளன. ஏனெனில் கோகோ விலைகள் வியத்தகு முறையில் உயர்ந்துள்ளன. இது சமீபத்திய ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. உலகளாவிய கோகோ விநியோகத்தில் பெரும்பகுதிக்கு பொறுப்பான மேற்கு ஆப்பிரிக்கா, காலநிலை மாற்ற தாக்கங்களுடன் போராடி வருகிறது. இதனால் கானா மற்றும் ஐவரி கோஸ்டில் அறுவடை குறைகிறது.  நுகர்வோர் விலைகள் உயர்ந்த…

அன்னை பூபதியின் நினைவு தினம்: சிவில் சமூக செயற்பாட்டாளருக்கு அழைப்பாணை

சிவில் சமூக செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதனுக்கு மட்டக்களப்பு கொக்குவில் பிரதேச பொலிஸாரினால் விசாரணைக்கான அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (17) பி.ப 4.25 மணிக்கு அவரது வீட்டுக்குச் சென்ற மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸார் இருவரினால் நாளை 19 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அன்னை பூபதியின்  நினைவு தினம் தொடர்பான விசாரணைக்கு வருமாறு…

இத்தாலியில் கேபிள் கார் விபத்தில் குறைந்தது 4 பேர் உயிரிழப்பு

இத்தாலியின் தெற்கு நகரமான நேபிள்ஸ் அருகே நேற்று வியாழக்கிழமை நடந்த கேபிள் கார் விபத்தில் நான்கு பேர் இறந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். மற்றொருவர் காணாமல் போனதாக உள்ளூர் மீட்பு சேவைகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.  இந்த விபத்து காஸ்டெல்லம்மரே டி ஸ்டேபியா நகரில் உள்ள மான்டே ஃபைட்டோவில் நடந்தது. வாகனம் செங்குத்தான சரிவில்…

மனிதச் சங்கிலி அமைத்து 9,100 புத்தகங்களை நகர்த்த உதவிய மக்கள்

மதுரி Thursday, April 17, 2025 அமெரிக்கா, முதன்மைச் செய்திகள் அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள செல்சியா என்ற சிறிய நகரத்தில், 5,000 பேர் வசிக்கும் ஒரு சிறிய நகரமாகும். அங்கு ஒரு புத்தக்கடையிலிருந்து புத்தகங்களைப் புதிய கடைக்கு மாற்றுவதற்காக அங்கு வசிக்கும் மக்கள் ஒரு மனிதச் சங்கிலியை அமைந்து புத்தகங்களை புதிய கடைக்கு நகர்த்த உதவுவதற்காக …

சட்டவிரோதமான நிலத்தடி துப்பாக்கிச் சூட்டுத் தளம் கண்டுபிடிப்பு

ஸ்பெயினின் தெற்கு மாகாணமான கிரனாடாவில் உள்ள மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் சட்டவிரோத நிலத்தடி துப்பாக்கிச் சூடு தளத்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தும் மூன்று தளங்களை அங்கே அமைந்திருந்தன. துப்பாக்கிச்சூடு நடத்தும் தளத்தின் ஆழம் காரணமாக அருகில் உள்ள வீட்டு நபர்களால் துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தை செவிமடுக்கமுடியவில்லை. இந்த நடவடிக்கையின் போது…

உயிரினங்கள் வாழும் சாத்தியங்களுடன் புதிய கோள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு

சூரிய குடும்பத்தில் பூமியிலிருந்து தொலைதூரத்திலுள்ள நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கோளொன்றில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கே2-18பி (K2-18b) என அழைக்கப்படும் கோளோன்று தொடர்பில் ஆராய்ச்சிகளை நடத்திய  கேம்பிரிஜ் பல்கலை கழக குழுவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. பூமியிலுள்ள உயிரினங்களால் மாத்திரம் உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறுகள்  இந்த கோளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். …