Category முதன்மைச் செய்திகள்

ஒரு புறம் பேச்சுவார்த்தை: மறுபுறம் தாக்குதல்!

துருக்கியில் ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் நடத்துகொண்டிருக்க மறுபுறம் உக்ரைனில் வடகிழக்கு உக்ரைன் பிராந்தியமான சுமியில் ஒரு ரஷ்ய ட்ரோன் ஒரு சிற்றுந்து மீது மோதியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் இன்று சனிக்கிழமை தெரிவித்தனர். துருக்கி இஸ்தான்புல் நகரில் ரஷ்யாவும் உக்ரைனும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் நேரடி அமைதிப்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்: குருதிக்கொடையில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்: குருதிக்கொடையில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகாமையில் இன்றையதினம் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த இரத்ததான முகாமானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டு வருகின்றது. மக்கள் ஆர்வத்துடன் குறித்த இரத்ததான…

செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு – பாரிய புதைகுழியாக இருக்கலாம் என அச்சம்

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் பாரிய மனித புதைகுழி காணப்படலாம் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்றுள்ளது. செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது,…

காலதாமதத்திற்குப் பின்னர் ரஷ்யா-உக்ரைன் பேச்சுவார்த்தை ஆரம்பமானது!

ரஷ்யா-உக்ரைன் பேச்சுவார்த்தை காலதாமதத்திற்குப் பின்னர் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் தொடங்கியது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைகள் கீழ் மட்டக் பேச்சுவார்த்தைக் குழுக்களுடன் நடைபெற்று வருகின்றன.  அமெரிக்கா, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இஸ்தான்புல்லில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.  உக்ரைன் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை நாடுகிறது.  உக்ரைனை ஆக்கிரமித்த ரஷ்யா மோதலின் மூல காரணங்களை…

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக் கலந்துரையாடல்: மக்கள் எதிர்ப்பு!

மன்னாரில் கரையோர பகுதிகளில் கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மன்னார் தீவுப் பகுதியில் கனிய மணல் அகழ்வு முன்னெடுப்பது தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை சௌத்பார் மன்னார் பகுதியில் நடைபெற்றது. மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளர் ரமேஷ் கண்ணா தலைமையில் நடைபெற்ற இந்த…

திருகோணமலை குச்சவெளி வேலூரில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கல்!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு, கடந்த யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நீடித்த வலியையும், அரசால் மறுக்கப்படும் நீதிக்கான மக்களின் போராட்டத்தையும் வெளிப்படுத்தும் முக்கிய நிழக்வாக மாறியுள்ளன. அந்தநிலையில், 2025 மே 16ஆம் திகதி, திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி வேலூர் பகுதியில், மக்களின் பங்கேற்புடன் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்று முடிந்தது.…

யாழ் மடத்தடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

யாழ் மடத்தடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பல்வேறு தரப்பினராலும் தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினராலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியானது யாழ்ப்பாணம் – மடத்தடி பகுதியில் இன்றையதினம் வழங்கப்பட்டது. வீதியில் சென்ற மக்கள் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி…

அணுசக்தி வெளியேற்றம்: கைவிட்டது பெல்ஜியம்!

பெல்ஜியத்தின் திட்டமிடப்பட்ட அணுசக்தி ஒழிப்பை கைவிடுவதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை வாக்களித்தது. இந்த தீர்மானம் ஆதரவாக 102 வாக்குகளும், எதிராக எட்டு வாக்குகளும், 31 பேர் வாக்களிக்காமல் வாக்களித்தும் நிறைவேற்றப்பட்டது. 2003 ஆம் ஆண்டில், பெல்ஜியம் அணுசக்தியை படிப்படியாக நிறுத்துவதற்கான ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. 2025 ஆம் ஆண்டுக்குள் அணு மின் நிலையங்கள் மூடப்பட வேண்டும்…

கூடிய ஆசனங்களை பெற்றவர்களுக்கு ஆதரவு!

வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கூடிய ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிக்கு மற்றைய தரப்பு ஆதரவளிக்கும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று (15) நடைபெற்றது. அதன் பின்னர்…

கிளிநொச்சியில் தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் ஊர்தி பவனி

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்று (14) காலை ஆரம்பமான ஊர்தி பவனி இன்று வியாழக்கிழமை (15) கிளிநொச்சியை சென்றடைந்தது.  இதன்போது பரந்தன், கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அஞ்சலி செலுத்தினர். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது…