Category முதன்மைச் செய்திகள்

கனடா முள்ளிவாய்கால் நினைவாலயத்தில் நடந்த தமிழின அழிப்பு நாள்!

கனடா முள்ளிவாய்கால் நினைவாலயத்தில் நடந்த தமிழின அழிப்பு நாள்! கனடாவில் முள்ளிவாய்கால் நினைவாலயத்தில் தமிழின அழிப்பு நாளில் 16 ஆம் ஆண்டின் நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. No comments உலகம் ஐரோப்பா அதிகம் வாசிக்கப்பட்டவை யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேருந்து மீது இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த…

பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் 16ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினரால் இன்று லண்டனில் நினைவு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் திரண்டனர். கொட்டொலிகளுடன் ஆரம்பமான நீதிக்கான போராட்டம், பேரணியாக வெளிவிவகார அமைச்சகம் மற்றும் பிரதமர் இல்லம் வரை முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில், பிரித்தானிய தேசியக்கொடியை…

உயிர்நீத்தவர்களின் உறவுகள் கதறியழ, கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம்

தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்று ஞாயிற்றுக்கிழமை (18) பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் நடைபெற்றது. 2009 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்தினரால் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்ட மக்களை ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி நினைவு கூர்ந்து உணர்வெழுச்சியுடன் உறவுகள் அஞ்சலி…

லண்டன் வீதிகளில் வலம் வரும் தமிழின அழிப்பின் அவலங்களைப் பிரதிபலிக்கும் ஊர்தி

சிங்கள பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்டும், தொடர்ந்து நடைபெற்று வரும் தமிழின அழிப்பின் பேரவலங்களை ஒளித்திரையில் காட்சிப்படுத்தும் வீடியோவுடன், ஒரு சிறப்பு ஊர்தியானது இன்று அல்பேர்டன் (Alperton) பகுதியில் இருந்து லண்டனின் பாராளுமன்ற சதுக்கம் (Parliament Square) நோக்கி ஊர்வலமாகச் செல்கிறது. இந்த வாகன ஊர்தி ஆங்கிலம், இந்தி, சயினீஸ் மற்றும் அரபு மொழிகளில் தகவல்களை தாங்கி,…

கொழும்பிலும் நினைவேந்தப்பட்டது தமிழினப்படுகொலை நாள்

கொழும்பிலும் நினைவேந்தப்பட்டது தமிழினப்படுகொலை நாள் 2009ஆம் ஆண்டு போரின் இறுதியில் நிகழ்ந்தேறிய மனிதப்பேரவலத்தினை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழினப்படுகொலையின் 16 ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பில் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று…

மன்னாரில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாள் நினைவேந்தப்பட்டது

தமிழினப் படுகொலையின் (மே-18) 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (18) மன்னாரிலும் நினைவு கூறப்பட்டது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தினரால்  காலை 9 மணியளவில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது. இதன் போது இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மாலை…

பிரித்தானியா சவுத் என்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

பிரித்தானியா சவுத் என்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இங்கிலாந்தின் சவுத்என்டில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 16வருடத்தினை நினைவுகூர்ந்துள்ளனர். 17 திகதி மாலை கடற்கரையோரம் கூடிய மக்கள் 16 வருடங்களிற்கு முன்னர்  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் அழிக்கப்பட்ட தங்கள் உறவுகளை நினைவுகூர்ந்தனர்.

கத்தாரில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதை இஸ்ரேலும் ஹமாஸும் உறுதிப்படுத்தின.

சர்வதேச அளவில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தனது தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ள நிலையில், கட்டாரில் புதிய சுற்று காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக இஸ்ரேலும் ஹமாஸும் உறுதிப்படுத்தியுள்ளன. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் சனிக்கிழமை ஒரு…

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 153 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட 153 பேரின் உடல்கள்  காசா முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு வந்து சேர்ந்ததாகவும் மேலும் 459 பேர் காயமடைந்ததாகவும் முற்றுகைக்குள் உள்ள  காசாப் பிரதேசத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் முந்தைய நாட்களில் நடந்த தாக்குதல்களுக்குப் பிறகு இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட ஏழு பேரும் அடங்கும்…

காசாவைக் கைப்பற்றப் பெரும் தாக்குதல்களைத் தொடங்குகிறது இஸ்ரேல்

ஹமாஸை தோற்கடித்து, காசாவில் மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய தாக்குதலைத் தொடங்குவதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அதன் ஹீப்ரு எக்ஸ் கணக்கில், அந்தப் பகுதியின் மூலோபாயப் பகுதிகளை கைப்பற்ற ”ஆபரேஷன் கிதியோன் ரதங்கள்” துருப்புக்களை அணிதிரட்டியதாகக் கூறியது. “கிதியோன் ரதங்கள்” – ஒரு பைபிள் போர்வீரனைக் குறிக்கும்.…