Category முதன்மைச் செய்திகள்

உகந்தைமலை முருகன் ஆலய சூழலில் முளைத்த புத்தர் சிலை

அம்பாறை மாவட்டம் உகந்தைமலை முருகன் ஆலய கடற்கரை சூழலில் உள்ள குன்றில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.  வரலாற்றுப் பிரசித்தி பெற்ற  உகந்தை மலை ஆலய தீர்த்தக் கடற்கரையில் கடற்படை முகாமுக்கு அருகே உள்ள குன்றிலேயே குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு பௌத்த கொடியை பறக்க விடப்பட்டுள்ளமையும்…

பிரான்ஸ் கேன்ஸ் பகுதியில் மின்சாரம் துண்டி: 160,000 வீடுகளைப் பாதித்தது!

கேன்ஸ் திரைப்பட விழாவின் இறுதி நாளான சனிக்கிழமை, பிரெஞ்சு ரிவியரா ரிசார்ட் கேன்ஸைச் சுற்றியுள்ள பகுதியில் பெரும் மின் தடை ஏற்பட்டது. அருகிலுள்ள டானெரான் கிராமத்தில் உள்ள ஒரு துணை மின் நிலையத்தில் இரவு முழுவதும் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, உள்ளூர் நேரப்படி காலை 10:00 மணிக்குப் பின்னர் மின்வெட்டு தொடங்கியது. அதன் பின்னர்…

ஐரோப்பாவிலேயே அதிகபட்ச ஓய்வூதிய வயதை 70 ஆக உயர்த்தியது டென்மார்க்

ஐரோப்பாவில் மிக உயர்ந்த ஓய்வூதிய வயதை வழங்கும் நாடாக டென்மார்க் நாடு முன்னிலையில் உள்ளது. டென்மார்க்கின் பாராளுமன்றம் கடந்த வியாழக்கிழமை ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. இது 2040 ஆம் ஆண்டுக்குள் தற்போது நடைமுறையில் உள்ள ஓய்வூதிய வயது 67 வயதிலிருந்து 70 ஆக உயர்த்தப்பட்டது. பாராளுமன்றத்தில் பரந்த ஆதரவு இருந்தது, மொத்தம் 81 சட்டமன்ற உறுப்பினர்கள்…

கனடா தேர்தலில் மீண்டும் களமிறங்கவுள்ள இரு தமிழர்கள்

கனடா ஒண்டாரியோ Scarborough-Rouge Park தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை இரண்டு தமிழர்கள் அண்மையில் வெளியிட்டுள்ளனர். அதன்படி  Toronto நகர பாடசாலை வாரிய அறங்காவலர்களாக அனு ஸ்ரீஸ்கந்தராஜா, நீதன் சான் ஆகியோர் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை வெளியிட்டுள்ளனர். கனடாவில் குறித்த தொகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax…

யேர்மனி ஹம்பேர்க் தொடருந்து நிலையத்தில் கத்திக்குத்து! 17 பேர் காயம்!

யேர்மனியின் ஹாம்பர்க் நகரின் பிரதான தொடருந்து நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் 17 பேர் காயமடைந்ததாகவும், நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆளானதாகவும் அவசர சேவைகள் தெரிவித்தன. சம்பவ இடத்தில் 39 வயதுடைய யேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண்ணை கைது செய்துள்ளதாக ஹாம்பர்க் காவல்துறையினர் தெரிவித்தனர்.…

ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிப் பொருட்களுக்கு 50% வரி – டிரம்ப் அறிவிப்பு: பங்குச் சந்தைகள் சரிந்தன!

வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையைக் காரணம் காட்டி, ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப் பரிந்துரைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை அறிவித்தார். அவர்களுடனான எங்கள் விவாதங்கள் நடைபெறவில்லை. எனவே, ஜூன் 1, 2025 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது நேரடியான 50% வரியை நான் பரிந்துரைக்கிறேன் என்று அவர் தனது சமூக…

மல்வெயர் வலையமைப்பை அகற்றும் யூரோப்போல்: 20 பேரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு

உலகின் மிகவும் ஆபத்தான தீம்பொருள்கள் (Malware) சில இந்த வாரம் ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கையில் சீர்குலைக்கப்பட்டன. இதன் விளைவாக 20 கைது பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றிய குற்ற எதிர்ப்பு அமைப்புகளான யூரோபோல் மற்றும் யூரோஜஸ்ட் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தன. கனடா, டென்மார்க், பிரான்ஸ், யேர்மனி, நெதர்லாந்து, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த…

காலையில் எழுந்து வெளியே பார்த்ததும் வீட்டின் வெளியே பொிய கப்பல்!

நோர்வேயில் நபர் ஒருவர் காலையில் படுகையில் இருந்து எழுந்தவுடன் வீட்டின் தோட்டத்தில் ஒரு பொிய கொள்கலன்களை ஏற்றும் சரங்குக் கப்பல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். நேற்று வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 5 மணிக்கு 35 மீட்டர் (443 அடி) நீளமுள்ள கப்பல் ஜோஹன் ஹெல்பெர்க்கின் வீட்டின் ஒரு மீட்டர் தூரத்தில் இருந்தது. கப்பல் முழு…

உலகில் முதல் முறையாக ரோபோ குத்துச் சண்டைப் போட்டி அரங்கேற்றம்!

சீனாவின் ஹாங்சோ மாகாணத்தை சேர்ந்த யூனிட்டிரீ என்ற நிறுவனம், மனித வடிவிலான ரோபோக்களை தயாரித்து அவற்றை குத்துச்சண்டை போட்டிக்கு தயார் செய்து வருகிறது. முன்னதாக இந்த ரோபோக்களுக்கு மனிதர்களைப் போல் நடக்கவும், நடனமாடவும், ஓடவும் அந்நிறுவனம் பயிற்சி அளித்துள்ளது. இந்நிலையில், உடல் வலிமை சார்ந்து விளையாடப்படும் குத்துச்சண்டை போட்டிக்கு ரோபோக்களை தயார் செய்வதன் மூலம் அவற்றின்…

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் படிக்கத் தடை விதித்தது டிரம்ப் நிர்வாகம்

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர்களைச் சேர்க்கும் திறனை டிரம்ப் நிர்வாகம் இரத்து செய்தது. டிரம்பின் நிர்வாகத்தின் கொள்கை கோரிக்கைகளுக்கு அடிபணிய மறுத்ததற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இனி வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க முடியாது. ற்கனவே உள்ள வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் சட்டப்பூர்வ அந்தஸ்தை மாற்ற வேண்டும் அல்லது இழக்க வேண்டும்…