Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
நேற்றுப் புதன்கிழமை இரவு அமெரிக்காவின் தலைவநகர் வாஷிங்டனில் உள்ள யூத அருங்காட்சியகத்திற்கு வெளியே இஸ்ரேலிய தூதரகத்தின் இரண்டு ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட இரண்டு ஆண் மற்றும் பெண், அருங்காட்சியகத்தில் ஒரு நிகழ்வை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தபோது, 30 வயது சந்தேக நபர் நான்கு பேர் கொண்ட குழுவை அணுகி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பெருநகர…
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் குஜ்தார் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்தை குறிவைத்து இன்று புதன்கிழமை (மே 21) நடத்தப்பட்ட தற்கொலைக் கார் குண்டுவெடிப்பில் குறைந்தது நான்கு சிறார்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 38 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. குஜ்தார் துணை ஆணையர் யாசிர்…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை, உள்வரும் ஏவுகணைகளைக் கண்டறிந்து, கண்காணித்து, இடைமறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் திட்டத்தை வெளியிட்டார். கோல்டன் டோம் ஏவுகணைகள் உலகின் பிற பக்கங்களிலிருந்து ஏவப்பட்டாலும், விண்வெளியில் இருந்து ஏவப்பட்டாலும் கூட இடைமறிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று டிரம்ப் கூறினார். தனது “கோல்டன் டோம்” $175…
காசாவில் இராணுவ நடவடிக்கைகளை மிகவும் மோசமாக விரிவுபடுத்தினால் உறுதியான நடவடிக்கைகளை இஸ்ரேல் மீது எடுப்பதாக இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை எச்சரித்துள்ளன. அத்துடன் இஸ்ரேல் அதன் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி மற்றும் உடனடியாக மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 2 முதல் காசாவிற்குள் உணவு, எரிபொருள்…
போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் உடனடியாக தொடங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான தனது அழைப்பு மிகவும் சிறப்பாக நடந்ததாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில் தெரிவித்தார். ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர் நிறுத்தம் மற்றும் மிக முக்கியமாக, போரை…
சர்வதேச அளவில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தனது தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ள நிலையில், கட்டாரில் புதிய சுற்று காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக இஸ்ரேலும் ஹமாஸும் உறுதிப்படுத்தியுள்ளன. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் சனிக்கிழமை ஒரு…
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட 153 பேரின் உடல்கள் காசா முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு வந்து சேர்ந்ததாகவும் மேலும் 459 பேர் காயமடைந்ததாகவும் முற்றுகைக்குள் உள்ள காசாப் பிரதேசத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் முந்தைய நாட்களில் நடந்த தாக்குதல்களுக்குப் பிறகு இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட ஏழு பேரும் அடங்கும்…
ஹமாஸை தோற்கடித்து, காசாவில் மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய தாக்குதலைத் தொடங்குவதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அதன் ஹீப்ரு எக்ஸ் கணக்கில், அந்தப் பகுதியின் மூலோபாயப் பகுதிகளை கைப்பற்ற ”ஆபரேஷன் கிதியோன் ரதங்கள்” துருப்புக்களை அணிதிரட்டியதாகக் கூறியது. “கிதியோன் ரதங்கள்” – ஒரு பைபிள் போர்வீரனைக் குறிக்கும்.…
துருக்கியில் ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் நடத்துகொண்டிருக்க மறுபுறம் உக்ரைனில் வடகிழக்கு உக்ரைன் பிராந்தியமான சுமியில் ஒரு ரஷ்ய ட்ரோன் ஒரு சிற்றுந்து மீது மோதியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் இன்று சனிக்கிழமை தெரிவித்தனர். துருக்கி இஸ்தான்புல் நகரில் ரஷ்யாவும் உக்ரைனும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் நேரடி அமைதிப்…
2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான முதல் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தை எந்த பெரிய முன்னேற்றமும் இல்லாமல் முடிந்தது. பேச்சுவார்த்தையாளர்கள் கைதிகள் பரிமாற்றத்தில் உடன்பட்டனர், ஆனால் போர்நிறுத்தம் அல்லது இரு தலைவர்களுக்கிடையில் ஒரு சந்திப்பை உருவாக்கத் தவறிவிட்டனர். உக்ரைனும் ரஷ்யாவும் முதலில் ஒப்புக் கொள்ளப்பட்ட போர்க் கைதிகள் பரிமாற்றத்தை முடித்து, புதிய பேச்சுவார்த்தைகளைத்…