Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் சுற்றுலாத்துறையின் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்தாண்டு காலியில் நடைபெற்ற கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சியில் நிதி முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஹரின் கைது செய்யப்படலாம் என தெரியவந்துள்ளது. Smart Youth கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சி 2024ஆம் ஆண்டு…
வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்க தேசிய மக்கள் சக்தி ஆதரவளிக்கவுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியை அமைச்சர் பிமல் ரத்நாயக்க மறுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் “வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க தமிழரசுக் கட்சிக்கோ அல்லது வேறு எந்தக் கட்சிகளுக்கோ தேசிய மக்கள் சக்தி ஆதரவு…
மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய உதவி பொலிஸ் அத்தியச்சகர் ஒருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். அத்தநாயக்க முதியன்செலாகே உபசேன அத்தநாயக்க (வயது 57) என்பவரே உயிரிழந்துள்ளார். மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய இவர், இன்று காலை தனது வீட்டிலிருந்து வேலைக்கு வந்ததாகவும், சில உத்தியோகபூர்வ பணிகளுக்குச் செல்ல வேண்டும்…
புகையிரதம் மோதி தம்பதியினர் உயிரிழப்பு ஆதீரா Thursday, June 05, 2025 இலங்கை கொழும்பு – தெஹிவளை புகையிரத மார்க்கத்தில் நடந்து சென்ற தம்பதியர் மீது நேற்றைய தினம் புதன்கிழமை கொழும்பு கோட்டையிலிருந்து அளுத்கம நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பதுளை, பதுலுபிட்டியவில் வசிக்கும் 58 மற்றும் 59 வயதுடைய…
ஆனையிறவில் உற்பத்தியாகும் உப்பு இனிமேல் ‘ஆனையிறவு உப்பு’ என்றே அழைக்கப்படுமென கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும்…
IMF விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் அடுத்த கட்ட தவணையைப் பெற மின்சாரக் கட்டணத்தை 18% ஆல் அதிகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது. இது உண்மையா என்பதை தெரியப்படுத்துங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிக்குமா என்பதையும், IMF இன் விரிவாக்கப்பட்ட…
முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி 22 முதல் மே 30 வரை முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளில், இவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட வீரர்களில் 2,261 பேர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், 194 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும், 198 பேர்…
பூநகரியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகரி தம்பிராய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர். சரமாரியாக மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் குறித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் பூநகரி செம்பங்குன்று பகுதியைச்…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேலும் இரண்டு அமைச்சர்களை நியமிக்க உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில் தற்பொழுது 23 பேர் அங்கம் வகிக்கின்றனர். இந்த எண்ணிக்கையை 25 ஆக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் வாரங்களில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பிரதி சபாநாயகர் ரிஸ்வி…
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த 140 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,757 குடும்பங்களைச் சேர்ந்த 10,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். பெய்து வரும் பலத்த மழையை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள பல நீர்த்தேக்கங்களில் பல வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும்…