Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மறு அறிவித்தல் வரை கடல்சார் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணி வரையில், பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு…
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தலைவர்கள், பிரதி தலைவர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின் போது உள்ளுராட்சிமன்றங்களுக்கான ஆணையாளர்கள் சர்வாதிகாரத்துடன் செயற்படுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உகறுப்பினர் நளின் பண்டார எச்சரித்துள்ளார். குருணாகலில் நேற்றைய தினம் சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலுள்ள உள்ளுராட்சிமன்றங்களுக்கான தலைவர்கள்,…
இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோருக்கு நியாயமான தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்து சட்டத்தரணி தனுஷ்க ரனாஞ்சக கஹந்தகம குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார். முறைப்பாட்டை பதிவு செய்ய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கப்படும் என கூறியே அனைத்து…
பாசையூர் அந்தோனியார் பெருநாளில் போதை மாத்திரை விற்பனை செய்யும் நோக்குடன் வந்த இளைஞன் ஒருவர் 10 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் அந்தோனியார் தேவாலய திருச்சொரூப தேர்ப் பவனி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அதன் போது பெருமளவான பக்தர்கள் கூடியிருந்தனர். அந்நிலையில் , அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் , நடமாடிய…
நபரொருவரின் கை கால்களை கட்டி கொலை செய்து வீட்டில் இருந்த வாகனத்தை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது. வென்னப்புவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெற்கு உல்ஹிடியாவ பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர் 64 வயதுடைய மாரவில, மூதூகட்டுவ பகுதியைச் சேர்ந்த ஒருவராவார். குறித்த வீட்டின் உரிமையாளர்கள் இத்தாலியில் வசித்து வருவதாகவும்,…
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசிதவுக்கு விளக்கமறியல் நீடிப்பு! தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவின் விளக்கமறியலை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் நீடித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான அரச…
இந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்கு வந்த ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று கடத்தப்படவுள்ளதாக தொலைபேசி மூலமாக தவறான தகவல் பரப்பி, அரசிற்கு எதிரான செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை வௌ்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபரிடமிருந்து Tab, ஐபோன், ரவுட்டர் மற்றும் பண பரிமாற்றங்களுக்கான வங்கி பற்றுச்சீட்டுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த Tab…
பட்டலந்த அறிக்கையை அரசியலுக்காக தூசி தட்டி வெளியில் எடுத்தவர்கள் தமிழர்களுக்கு எதிராக புரியப்பட்ட இன அழிப்பு, இனப்படுகொலை விடயங்களை பகிரங்கமாக கையாள்வதற்கு முன்வர மாட்டார்கள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செம்மணி…
கம்பளையைச் சேர்ந்த குடும்பம் இந்தியாவில் தஞ்சம்! ஆதீரா Tuesday, June 10, 2025 இந்தியா, இலங்கை கண்டியை சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்று கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். கம்பளை பகுதியைச் சேர்ந்த முஹம்மது கியாஸ் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும், தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி பகுதியை…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாளைய தினம் புதன்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் முறைப்பாடுடன் தொடர்புடைய மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் CIDயில் ஆஜராகவுள்ளார். மருந்து இறக்குமதி தொடர்பாக கெஹலிய ரம்புக்வெல்ல முன்னதாக CIDயில் முறைப்பாடு அளித்திருந்தார். இந்தப் முறைப்பாடுடன் தொடர்புடைய…