Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
எரிபொருளை பதுக்க வேண்டாம் ஆதீரா Monday, June 23, 2025 இலங்கை தேவையில்லாமல் எரிபொருளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் பொதுமக்களிடம் கோரியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை காரணமாக போர் சூழல் ஏற்பட்டால் எரிபொருள் இல்லாமல் போகாது. விலைகளில் மட்டுமே மாற்றம் ஏற்படும். இது எங்களுடைய பிரச்சினை அல்ல. உலகின் சக்திவாய்ந்தவர்களின்…
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. சஜின் வாஸ் குணவர்தன 2010 – 2012 காலப்பகுதிகளில் அரசாங்கத்துக்கு 369 இலட்சம் ரூபா வருமான வரி செலுத்தவில்லை என கூறி, சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர்…
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். நானுஓயா ரயில் சுரங்கப்பாதைக்கு அருகில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. நானுஓயா பிரதான நகரில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு பயணிக்கும் போதே விபத்து இடம்பெற்றதாகவும்…
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணைகளில், எந்தவித ஆவணங்களும் இல்லாமல் 30 கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணையைத் ஆரம்பித்தது. இந்நிலையில், சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட குழு பல்வேறு பிரிவுகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் எந்த அடிப்படையில்…
இலங்கையில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் சென்னை சென்ற தாயும், மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டு அதிகாரிகளால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அரும்பாக்கம் பகுதியில் வசித்து வரும் 2 பெண்கள், இந்திய கடவுச்சீட்டில் கொழும்பிற்கு சுற்றுலாப் பயணிகளாக வந்து சென்னை திரும்பிய நிலையில், அவர்களது கடவுச்சீட்டு உள்ளிட்ட…
வடக்கில் உள்ள பல மனிதப் புதைகுழிகள் குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், சரியான தகவல்கள் இல்லாமல் அரசாங்கம் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். மண்டைதீவில் உள்ள மனிதப் புதைகுழிகள் குறித்து வெளியிடப்படும் தகவல்கள் வதந்திகளை…
வரலாற்றில் முதல்தடவையாக ஜக்கிய தேசிய கட்சி வசமிருந்த கொழும்பு மாநகரசபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இதனிடையே மலையகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் உள்ள , உள்ளூராட்சி மன்றங்களில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்க முன்வந்துள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள்…
தம்புள்ளை பிரதேச சபையின் 6 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவரை நியமிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி…
கொழும்பு மாநகர சபை தேசிய மக்கள் சக்தி வசம் கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் வெற்றி பெற்றுள்ளார். 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் 61 வாக்குகளை விராய் கெலி பல்தஸார் பெற்றுக்கொண்டதோடு, எதிர்க்கட்சிகள் சார்பில்…
முன்னாள் அமைச்சர் தயா கமகேவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களை பொது ஏலத்தில் விட கொழும்பு வணிக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயா குரூப் லிமிடெட் , தயா எப்பரல் எக்ஸ்போர்ட்டர்ஸ் (பிரைவேட்) லிமிடெட், ஒலிம்பஸ் கன்ஸ்ட்ரக்ஷன் (பிரைவேட்) லிமிடெட் ஆகிய நிறுவனங்களே இவ்வாறு ஏலம் விடப்படவுள்ளது இது தொடர்பாக நீதிமன்றப் பதிவாளர் மற்றும் பிரதி…