Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஒரு கோடியோ 50 லட்சம் பெறுமதியான மதுபானம் மற்றும் ஏலக்காயை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற நான்கு இலங்கை பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்பு மற்றும் ஹட்டன் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…
கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர் மூவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பிஸ்டல் வகை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தில் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 30 வயதான தாயும் அவரது 12…
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 62 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவற்றில் 44 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலக கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளது. இதேவேளை, நேற்று மாத்திரம் நாட்டில் மூன்று…
ராகம – படுவத்தை பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டியில் வந்த இருவர், பிஸ்டல் வகை துப்பாக்கியால் வீடொன்றை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் படுவத்தை கிராம அபிவிருத்தி மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றை இலக்காகக் கொண்டு இடம்பெற்றதாகவும், இதில் ‘ஆர்மி…
இலங்கையின் கடற்கரை பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டம் ஆகிய பிரதேசங்களில் இருந்து அடையாளம் காணப்படாத மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுதுவாவ் கடற்கரைப் பகுதியில், ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் நீல நிற காற்சட்டை மற்றும் சிவப்பு கோடு வந்த நீல நிற டீ-சர்ட் அணிந்துள்ளதாகவும் சடலத்தை அடையாளம் காண உதவுமாறும்…
இன்று முதல் இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை இன்று புதன்கிழமை முதல் ஸ்டார்லிங்க் (Starlink) இணைய சேவையை இலங்கையில் பெற்றுக்கொள்ளலாம் என ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் இலோன் மாஸ்க் தெரிவித்துள்ளார். ஸ்டார்லிங்க் இணைய சேவை அதிவேகமாக செய்படக்கூடியது. இலங்கையில் உள்ளவர்கள் இந்த சேவையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டார்லிங்க் என்பது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ்…
கச்சதீவு விவகாரத்தை இந்தியத் தரப்பு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டியுள்ளார். தனியார் ஊடகமொன்று வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்ததாவது கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது. எந்த வளமும் அற்ற அந்தத் தீவில் ஒரு தேவாலயம் உள்ளது. மீனவர்கள் தமது வலைகளை உலரவைப்பதற்கு அந்தத் தீவைப்…
வடக்கில் படைமுகாம் அகற்றல் மற்றும் காணி விடுவிப்பின் போது பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றின் போது வடக்கு, கிழக்கு காணி விடுவிப்பு சம்பந்தமாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ளதாவது, வடக்கு, கிழக்கில் புலிகளின்…
கஹவத்த,பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு சென்ற கும்பல் ஒன்று வீட்டில் இருந்த இருவரை கடத்திச் சென்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றையவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கஹவத்த, யாயன்னா, கொஸ்கெல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்றைய தினம் இரவு வந்த நான்கு பேர்…
யுத்தத்தில் விடுதலைப் புலிகளால் இராணுவத்தினரும், பொலிஸாரும், சிங்கள மக்களும் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் மனித உரிமைகள் மீறப்படவில்லையா, இவர்களை மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நினைவுகூரவில்லை. நவநீதம் பிள்ளை,செய்ட் அல் ஹுசைன் ஆகியோரை போன்று உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் பிரிவினைவாதிகளை மாத்திரம் சந்தித்துள்ளார். இவரது செயற்பாடு வன்மையாக கண்டித்தக்கது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள்…