Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஐந்து வருட இடைவெளிக்குப் பின்னர் இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்த இலங்கை அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, தனியார் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. பொருளாதாரக் கட்டுப்பாடுகள் காரணமாக 2020 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட நீண்டகால இறக்குமதித் தடையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நாட்டின் வாகனத் துறையில்…
இலங்கையின் எரிசக்தி துறைக்கு புதிய வலுச் சேர்க்கும் வகையில் அமெரிக்காவின் ஷெல் எண்ணெய் நிறுவனம், இலங்கையில் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்துள்ளது. அதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையமானது கொழும்பு, அம்பத்தளைப் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. ஷெல் பிராண்ட்ஸ் இன்டர்நேஷனல் ஏஜி (ஷெல்) மற்றும் ஆர்எம் போர்க்ஸ் (தனியார்) லிமிடெட் மேலும் இவற்றின் துணை நிறுவனங்கள் 2024…
வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிந்திருந்தாலும், அத்தகைய சம்பள அதிகரிப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று இலங்கையின் ஐக்கிய தொழில்முனைவோர் மன்றம் தெரிவிக்கிறது. வணிகர்கள் திவாலான தங்கள் வணிகங்களை மீண்டும் உயிர்ப்பிக்க கால அவகாசம் தேவை என அதன் தலைவர் டானியா எஸ். அபேசுந்தர தெரிவித்தார். நாங்கள் உங்களிடம்…
சுமார் ரூ.12 மில்லியன் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் குஷ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் இன்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். குறித்த பெண், தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து ஹொங்கொங் வழியாக இலங்கைக்கு பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் 38…
இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசாங்கம் என்பன உரிய காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்தார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதாலேயே அவர்கள் கைது செய்யப்படுகின்றனர் எனவும், மீனவர் விவகாரத்தை மனிதாபிமானத்துடனேயே…
இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது இராணுவ உயர் அதிகாரிகளுடனான இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது. இதில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக…
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக தாயும், மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 19 ஆம் திகதி, கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை இலக்கம் 05 நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட குற்றச்சாட்டில் குறித்த இருவரையும் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியைச்…
தற்போதைய வறண்ட வானிலை நிலைமைகள் தொடர்ந்து நீடித்தால் மின்சாரக் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். “மின்சாரக் கட்டணங்களை 20% குறைத்தோம். ஆனால், வறட்சி இப்படியே சென்றால் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எங்களுக்கு செலவு என்பது இலாபமாகவோ அல்லது மீதியாகவோ செல்வதில்லை. எங்களை நிலைநிறுத்திக் கொள்ள…
தையிட்டி விகாரை பிரச்சனையை தாம் ஆறு மாத காலத்திற்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், மக்களின் காணி மக்களுக்கே என்பதில் நாமும் உறுதியாக இருக்கிறோம். இது தொடர்பில் தையிட்டி விகாரை அமையப்பெற்றுள்ள…
மாலபே பொலிஸ் பிரிவில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி, காரில் பயணித்த தம்பதியினரை சுமார் 2 கிலோ கிராம் கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர். மாலபே பொலிஸார் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீதி சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, கார் ஒன்றை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர். இதன்போது குறித்த…