Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்கு அந்த அந்த நாடுகளே விமான பயண சீட்டுக்களை வழங்கியது என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு மீதான …
புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2025 வரவுசெலவுத் திட்டத்தின் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் செலவினங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…
வத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபரை, பொலிஸார் வழி மறித்த போதிலும் தப்பி செல்ல முற்பட்ட வேளை அந்த லொறி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த நபரை கைது செய்துள்ளனர். வத்தளை பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு காய்கறிகளை ஏற்றி வந்த, குளிரூட்டப்பட்ட லொறியொன்றே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார்…
எரிபொருள் தட்டுப்பாடு இல்லை நாட்டில் எரிபொருள் இருப்புக்களில் தட்டுப்பாடு இல்லை என்று தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்தார். எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்றைய தினம் சனிக்கிழமை பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே இதனைக் குறிப்பிட்டார். தற்போது நாட்டில் எரிபொருள் நெருக்கடி இருப்பதாகக் காட்ட…
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் இரகசிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணையை மேற்கொண்டு வரும் கொழும்பு குற்றப்பிரிவு, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியின் உத்தியோகபூர்வ அறையில் தொடர்புடைய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. குறித்த அறிக்கைக்கு அமைவாக, நீதிமன்றம் பொலிஸாருக்கு பல உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. அதன்படி, பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட…
மரண சடங்கில் மோதல் – சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு பத்தேகம, மத்தெவில பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். மரண வீடொன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வின் போது இரு குழுக்களிடையே மோதல் சம்பவம் ஏற்பட்டது. சம்பவத்தில் சகோதரர்கள் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
குளியாப்பிட்டி, ஹெட்டிபொல பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி உயிழந்த சம்பவம்தொடர்பில் ஒருவரை ஹெட்டிபொல பொலிஸார் கைது செய்துள்ளனர். மகுலாகம பகுதியில் பன்றிகளை வேட்டையாடும்போது கவனக்குறைவாக சுடப்பட்டதன் விளைவாக சிறுமி இறந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் சிறுமியின் பாட்டி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம்…
முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய விசேட வெளிப்படுத்தல் ஒன்றை வெளியிட்டார். பாராளுமன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்துக்களை வெளிப்படுத்திய பிரதமர், ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பின்வருமாறு தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ 2010 முதல்…
கழுதைக் கடத்தல் முறியடிப்பு சட்டவிரோதமாக 6 கழுதைகளை ஏற்றிச் சென்ற இரண்டு லொறிகளை கைப்பற்றி சாரதிகளை நுரைச்சோலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நுரைச்சோலைக் காவல்துறை நேற்று புதன்கிழமை (26) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் நரக்கல்லி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி காவல்துறை அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நுரைச்சோலை காவல்துறை இந்த சுற்றிவளைப்பை…
குற்றப் புலனாய்வுத் துறையில் முன்னிலையானார் நாமல்! இலங்கை பொதுஜன பெரமின (SLPP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று புதன்கிழமை (26) காலை குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) ஆஜரானார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அவர் சிஐடிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.