Category இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வாக்களிப்பதற்கு 1 கோடியே 73 லட்சம் போர் தகுதி!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 72 இலட்சத்து 96 ஆயிரத்து 330 பேர் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் மாவட்ட தேர்தல் ஆணையாளர்கள், துணை மற்றும் உதவி…

உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் சகல வேட்பாளர்களும் தங்களது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  வேட்புமனு தாக்கல் செய்யப்படும்போது, அதில்…

பாடசாலைகளில் பணம் அறவிட்டால் அறிவிக்கவும்

கல்வித்துறையில் உருவாகியுள்ள பல நெருக்கடிகளுக்கு கல்விக் கொள்கைகள் முறையாக அமுல்படுத்தாமையும் அரசியல் தலையீடுகளுமே காரணம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாடசாலைகளில் இடம்பெறும் நிதி சேகரிப்பு தொடர்பில் துரித விசாரணைகள் நடத்தப்படுமெனவும் பிரதமர் குறிப்பிட்டார். பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தொடரில் எழுப்பப்பட்ட…

ஞானசார தேரருக்கு எதிராக முறைப்பாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குல் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு  எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குல் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், அவரின் கருத்து தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி குறித்த முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டை இலஞ்ச ஊழல்…

காட்டு யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுக்க AI தொழில்நுட்ப சாதனம்

காட்டு யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுக்க AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உபகரணமொன்றை பரிசோதிப்பதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு முடிவு செய்துள்ளது. நாளை முதல் கொழும்பிலிருந்து மாத்தளைக்கு செல்லும் ரயிலில் இந்த உபகரணம் பொருத்தப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். சோதனைகளைத் தொடர்ந்து, மட்டக்களப்பு பாதையில் இரவில் இயக்கப்படும் அனைத்து…

14 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்று வியாழக்கிழமை (06) இரவு கைது செய்யப்பட்டு தாழ்வுபாடு கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட  நிலையில்,குறித்த மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த 14 இந்திய மீனவர்களும் நேற்று வியாழக்கிழமை (06) இரவு  இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்…

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதை இராணுவம் தடுத்தது 

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதை இலங்கை அரச படைகள் தடுத்தன என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சவுதி அரேபியாவை தளமாக் கொண்ட அல் ஜசீராவில் தொலைக்காட்சியின் ஹெட் டு ஹெட் நிகழ்ச்சியில் பிரிட்டிஷ் ஊடகவியலாளர் மெஹ்தி ஹசனுக்கு வழங்கிய நேர்காணலிலையே அவ்வாறு தெரிவித்தார்.  குறித்த நேர்காணலில்,…

வெளிநாட்டு பிரஜையிடம் லஞ்சம் கோரிய மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

வெளிநாட்டு பிரஜையிடம் லஞ்சம் கோரிய மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது வெளிநாட்டு சிகரெட்டுகளுக்காக ஆஸ்திரியா நாட்டு பெண்ணிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  வௌிநாட்டு சிகரெட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக குறித்த ஆஸ்திரியா சுற்றுலாப் பயணியிடம் 50,000 ரூபா…

தேசபந்துவின் சலுகைகள் நீக்கம்

தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்ட கார் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நிறுத்தி வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசபந்து தென்னகோனின் பாதுகாப்பு மற்றும் பிற சலுகைகளை நீக்கக் கோரி, பொலிஸ் தலைமையகத்திலிருந்து ஜனாதிபதியின் செயலாளர் சனத் நந்தித குமநாயக்கவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரை தெரியும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரை தெரியும் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயற்பட்டவரை தமக்கு தெரியும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இந்த பிரதான சூத்திரதாரி யார் என்பது தெரியும் என்பதனை மிகவும் பொறுப்புடன் கூறுவதாகவும் அதனை ஊடகங்களிடம் பகிர்ந்து கொள்ள தயாரில்லை…